ஒரு சுற்றுச்சூழல் படுகொலை- தவக்காலத்தில்?


an innocent child playing at garbage

பசுமையை நோக்கி தவக்காலத்தில் கார்டினல் போ, மியன்மார் கத்தோலிக்கர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதைப் பற்றி அறிய 40 நாட்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்.  தவக்காலத்தின் 40 நாட்களில் இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை யாங்கோனின் கார்டினல் சார்லஸ் மயுங் போ எடுத்துரைத்துள்ளார்.

பிப்ரவரி 16 அன்று யாங்கோன் பேராயர் வெளியிட்ட 2020 தவக்கால  செய்தியில், மியான்மர் கார்டினல், கடவுளுக்கும் மக்களிடையேயும், மக்களுக்கும் மக்களிடையேயும், மக்களுக்கும்  சுற்றுச்சூழலுக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான நேரம் என்று கூறினார்.

மனித பேராசை மற்றும் சுயநலம் என்பதன் பொருள் இதுவே. நாம் வாழும் உலகின் நீர், காற்று, நிலம், மலைகள் மற்றும் விலங்குகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

"கடவுள் மற்றும் அவர் உருவாக்கிய மனிதர்களுடனும், மக்களுடனும், இயற்கை சூழலுடனும், சமாதான கூட்டுறவை நோக்கி, உலகை பசுமையாக்குவதற்கும், நல்ல வானிலை பாதுகாப்பதற்கும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு, நமது அணுகுமுறைகள், நடத்தை, நாம் பேசும் விதம் மற்றும் நாம் எழுதும் விதம் மாறவேண்டும்” என்று போ கடிதத்தில் கூறினார்.

பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 12 வரை 40 நாட்களுக்கு அவர் பரிந்துரைத்த நடைமுறை வழிகாட்டுதல்களைப் பயிற்சி செய்ய குருக்கள் , துறவறத்தார் மற்றும் மக்களை கார்டினல் கேட்டுக்கொண்டார்.

லாடடோ சி’யை மேற்கோள் காட்டி, கார்டினல் போ சுற்றுச்சூழலின் சீரழிவு “பொருளாதார பயங்கரவாதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளால்” ஏற்படுவதாகக் கூறினார்.

பேராசை உலகின் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு தூண்டுகிறது என்று 72 வயதான கார்டினல் எச்சரித்துள்ளார், இன்று நாம் ஒரு சுற்றுச்சூழல் படுகொலையை எதிர்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த கடவுள் நேரத்தில் நாமும் இதை செய்வோமா?

Add new comment

7 + 6 =