தண்ணீரா...


Church document on water in the needed time

தண்ணீர் வாழ்வின் ஊற்று (Aqua fons vitae) என்ற தலைப்பில் திருஅவையின் புதிய ஏடு. இப்பூமிக்கோளத்தின் நீர் வளங்கள் பாதுகாக்கப்படுவது மற்றும், மனிதர் எல்லாருக்கும் சுத்தமான தண்ணீர் வழங்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. இந்த ஏடு, இப்பூமியில், திடப்பொருள், திரவம் மற்றும் வாயு வடிவங்களில், இயற்கையாகவே கிடைக்கும் ஒரே பொருள் தண்ணீர் என்றும், தண்ணீரின்றி இப்பூமிக்கோளத்தில் வேறு வாழ்வே இல்லை என்றும் கூறுகிறது.

தண்ணீர், உடலையும், ஆன்மாவையும், தூய்மைப்படுத்துவதோடு தொடர்புள்ள வல்லமைமிக்க ஓர் ஆன்மீக அடையாளம் என்றும், திருமுழுக்கு, கடவுள் அருளின் அடையாளமாக விளங்குகிறது என்றும், தண்ணீரால் வழங்கப்படும் திருமுழுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, ஆன்மீக மறுபிறப்பைக் குறித்துக் காட்டுகின்றது என்றும், அந்த ஏடு தெரிவிக்கின்றது.

மனிதரின் பயன்பாட்டுக்கு தண்ணீர்; அது, பல்வேறு மனிதச் செயல்பாடுகளுக்கு, குறிப்பாக, வேளாண்மை மற்றும், தொழிற்சாலைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வளம்; ஆறுகள், பூமிக்கடியிலுள்ள நீர்வளம், ஏரிகள், குறிப்பாக, பெருங்கடல்கள் மற்றும், கடல்களாகத் தண்ணீர் ஆகிய, தண்ணீரோடு தொடர்புடைய மூன்று கூறுகள் பற்றி இந்த ஏடு விளக்குகிறது. 

வறியோரின் அழுகுரல் மற்றும், இப்பூமியின் அழுகுரலின் அடையாளமாக உள்ள தண்ணீர் பற்றிய இந்த ஏட்டின் ஒவ்வொரு பிரிவும், உலகின் ஒவ்வொரு பகுதியிலும், தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும், அதனைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவரிக்கிறது. இந்த ஏட்டின் இறுதிப் பிரிவு, கல்வி மற்றும், ஒருங்கிணைந்த முயற்சி பற்றியும் கூறுகிறது. இதைப்பற்றி மேலும் அறிய இணைந்திருங்கள். 
 

Add new comment

3 + 3 =