இறைநம்பிக்கை அவசியமா?

முடிவற்றவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்குமளவும், இறைநம்பிக்கை அவசியம். இதற்குமேல் கடவுள் கொடுத்த வழி என்ற நிலையை வாழ்வில் எல்லா நிலையிலும் உணருகிறோம். இறைநம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கை விரக்தியாகிவிடும், ஒரு சூனியம் நிறைந்த வாழ்க்கையாகும். இறைநம்பிக்கை அற்ற சமூகம் என்று ஒன்று இந்த உலகில் இல்லை. ஆனால் நம்பிக்கையில் வேறுபாடுகள் இருக்கலாம். நாம் புரிந்து கொள்ளவேண்டியது மதம் என்பது வேறு ஆன்மீகம் என்பது வேறு. மதம் என்பது ஒரு நிறுவனம். ஆன்மீக சமயம் வேறு, நிறுவனமான சமயம் வேறு. ஆக, முடிவுகள் கொண்ட இந்த வாழ்வை வாழ்கின்ற நமக்கு முடிவற்ற ஒருவனின் மீதுள்ள நம்பிக்கை அவசியம். இறைநம்பிக்கை அவசியம். #veritastamil

Add new comment

4 + 5 =