இறைநம்பிக்கை அவசியமா? 

இறைநம்பிக்கை வேறு, ஆன்மீக நம்பிக்கை வேறு. மதங்களைத் தாண்டியது இறைநம்பிக்கை. மனிதனின் சக்தி ஒரு எல்லைக்கு உட்பட்டது. அவனுடைய பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. மனித சக்தி எல்லைக்குட்பட்டது, அதையும் தாண்டி ஒரு சக்தியிருக்கிறது. ஆக மனிதனின் எல்லை, இயலாமை இருப்பதால், இறைநம்பிக்கை அவசியமாகிறது.

இறைநம்பிக்கை மனதுக்குள் ஒரு நம்பிக்கையைத் தருவதால் இது அவசியம். என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அதற்குமேல் கடவுள் வழிநடத்துவார். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் இடிந்தபிறகு இறைநம்பிக்கை மக்களில் பெருகியிருக்கிறது என்று கூறுகிறார்கள். அந்த இறைநம்பிக்கையில், அவர்களின் ஆன்மீகத்தில் வேறுபாடு இருக்கும். மதம் வேறு, ஆன்மீகம் என்பது வேறு. ஆக இறைநம்பிக்கை அற்ற சமூகத்தில் வன்முறையும், தற்கொலையும் அதிகமாகும். 

இறை நம்பிக்கை அவசியமா என்ற தலைப்பில் மானுடவியலாளர் முனைவர் ஜோ அருண் அவர்களின் இந்தக் காணொளிப் பகிர்வின் சுருக்கம் இது.

தொடர்ந்து இந்த செய்தியைப் பார்க்க எங்கள் சேனலுக்கும், இணையதளத்துக்கும் வாங்க -  #Veritastamil #rvapastoralcare

Add new comment

4 + 3 =