சடங்குகள் அவசியமா?

சடங்குகள் அவசியம். சடங்குகள் தருகின்ற குறியீடுகள் அவசியம். சடங்குகள் என்பது திடீரென்று வந்தது அல்ல மாறாக அது ஒரு வரலாற்றிலிருந்து வருகின்றது. சடங்கு ஒரு வரலாற்று நிகழ்வை மீண்டும் நிகழ்த்திக்காட்டுகின்றது. 

ஒரு சடங்கில் நாம் பங்குகொள்ளவேண்டும். மனதளவில் ஒரு எழுச்சியை உருவாக்கவேண்டும். அந்த நிறைவை தரவேண்டும். அந்த நிறைவைத் தராத சடங்குகள் வெற்றுச் சடங்குகள் ஆகின்றன. இந்த சடங்குகள் குறியீடுகளால் வெளிப்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றிலும் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றோம். நம்முடைய ஒவ்வொரு குறியீட்டிற்கும் ஒரு அர்த்தக் கட்டமைப்பு இருக்கின்றது. எனவே நம்முடைய சடங்கில் பயன்படுத்தும் குறியீடுகளின் அர்த்தத்தையும், வரலாற்றையும் தெரிந்து நாம் பயன்படுத்தும்போது சடங்குகள் அர்த்தம் பெறும். 

தொடர்பில் கொடுக்கப்பட்ட காணொளிக்காட்சியின் சுருக்கம்

தொடர்ந்து இந்த செய்தியைப் பார்க்க எங்கள் சேனலுக்கும், இணையதளத்துக்கும் வாங்க - #Veritastamil #rvapastoralcare

Add new comment

1 + 1 =