இறை இரக்கத்திற்குள் நாம் | Sharing on Divine Mercy

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவிற்கு பிறகு வரும் ஞாயிறு கொண்டாடப்படும் இறை இரக்கப் பெருவிழா பேலாந்து நாட்டினைச் சேர்ந்த புனித பவுஸ்தினா அவர்களின் நாள்குறிபேட்டில் பதித்திருந்த இறை இரக்க ஆண்டவரின் காட்சிகளின் அடிப்படையில் வழிவந்தது.

1936 ஆம் ஆண்டு அவர் கண்ட காட்சியின் அடிப்படையில்தான் இறை இரக்கப்படம் வரையப்பட்டு அதில் இயேசுவே உம்மீது என் நம்பிக்கையை வைக்கின்றேன் என்று எழுதப்பட்டது. அதன் பின்பு மேரியன்ஸ் சபைத் துறவிகளால் அது பரப்பப்பட்டது. இந்த பக்திமுயற்சியானது 1958 இல் திருஅவையினால் தடைசெய்யப்பட்டது.

மீண்டும் 1978 ஆம் ஆண்டு தகுந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது தடைநீக்கப்பட்டது. 1980 இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் ரிச் இன் மெர்சி (இரக்கத்தின் முகம்) என்ற தனது இரண்டாம் திருமடலை எழுதினார். 2000 ஆம் ஆண்டு முத்திபேறுபெற்ற பவுஸ்தினா அவர்கள் புனித நிலைக்கு உயர்த்தப்பட்டபோது திருவழிபாட்டு நாட்காட்டியில் இவ்விழா சேர்க்கப்பட்டது. கடவுளின் இரக்கப் பெருக்கை எந்த மனிதரும் தன்னுடைய அறிவினால் முழுவதும் ஆராய்ந்துணர முடியாது. ஆனால் திறந்த மனதுடன், நம்பிக்கையில் ஊன்றியிருப்பின், தன்னுடைய வாழ்க்கை சூழ்நிலையில் அனுபவிக்கலாம்.

இறை இரக்க செபமாலை எங்கள் குடும்பத்தின் வாழ்வுப்பாதையை மாற்றியமைத்தது, தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. இதுதான் இறை இரக்கத்தின்மீது என்னுடைய நம்பிக்கையின் தொடக்கம். எத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டாலும், இயேசுவே உமது தெய்வீக இரக்கத்தினுள் வைத்து எங்களைக் காத்துக்கொள்ளும் என்று வேண்டுங்கள் எல்லாம் மாறிவிடும். ஏனென்றால் அவருடைய இரக்கத்திற்கு எல்லையில்லை.

1. எந்த சூழ்நிலையையும் மாற்றக்கூடியவர் நாம் நம்பியிருக்கும் கடவுள் என்ற மனபாங்கு வேண்டும்.

2. எத்தகைய பாவியாக இருந்தாலும், அவரை உற்றுநோக்கியவர்கள் நலம் பெறுவார்கள். அது இஸ்ரயேல் மக்களாக இருந்தாலும், ஊதாரி மைந்தராக இருந்தாலும்.

3. இறை இரக்கம் அனுபவித்த மனிதர்கள் எந்த மனிதனையும் தரம்தாழ்த்தமாட்டார்கள் மாறாக மதிப்பளித்து இரக்கம் காட்டுவார்கள். அந்த ஊதாரி தந்தையைப் போல.

4. எது மற்றவர்கள் தேவை என்பதை உணர்ந்து செயல்படக்கூடியவர்கள். இறைவின் இரக்கத்திற்குள் நம்மை புதைத்துக்கொள்வோம் மாபெரும் இரக்கத்தின் கருவியாக மாறுவோம்.

Add new comment

1 + 0 =