கிறிஸ்மஸ் தாத்தா உண்மையல்ல – சொன்ன ஆயர் மீது பெற்றோர் கோபம்


Santa-Claus

கிறிஸ்மஸ் தாத்தா உண்மையல்ல என்று குழந்தைகளிடம் தெரிவித்த ஆயர் மீது பெற்றோர் கோபமடைந்துள்ளனர். பெலிவில்லியில் இருக்கும் அமைதி மரியன்னை பள்ளிக்கு ஆயர் எட்வர்ட் பிராஸ்டன் சென்றபோது, 4ம் நூற்றாண்டு ஆயரான நிக்கோலாஸின் உண்மையான கதையை விளக்கி கொடுத்த பின்னர் பெற்றோரின் கடும் கோபத்தை இந்த ஆயர் பெற்றுள்ளார்.

இந்த சர்ச்சை முற்றிலும் தவறான புரிதலால் 10 முதல் 12 வயதான குழந்தைகளால் உருவானது என்று மறைமாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். ஆயர் நிக்கோலாஸின் விளக்கத்தை கேட்ட குழந்தைகள் பெற்றோரிடம் சென்று ஆயர் சாந்தா கிளாஸ் இல்லை என்று கூறிவிட்டார் என்று தகவல் தெரிவித்ததுதான் இந்த சிக்கலுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

2 + 3 =