Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நீதிக்காகக் காத்திருக்கும் கந்தமால் - 12
நாம் அனைவருக்கும் நினைவிருக்கும், நினைத்தாலே பதரவைக்கும் கொடுமையாக சம்பவம். கந்தமால் என்ற பெயரைக் கேட்டாலே எல்லாரும் கண்ணீர்சிந்தும் அந்த கொடிய சம்பவத்தை நினைவுகூறும் விதமாக ஆகஸ்டு 25 ஆம் தேதியை கந்தமால் நாளாக இந்திய திருஅவை அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கந்தமால் என்ற இடத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட வன்முறையில் பலியானவர்கள், அதில் உயிர்பிழைத்தும் அதற்கான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 12 ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்காக இந்த நாளை ஏற்பாடு செய்து, அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான முயற்சியை திருஅவை மேற்கொண்டுள்ளது.
2008 ஆம் ஆண்டில் இந்து தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறையில் பழங்குடி, தலித் கிறிஸ்தவர்களின் 395 ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டது. 100 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 40 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானர். பள்ளிகள், சமுதாய நல மையங்கள், நலவாழ்வு மையங்கள் அழிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. 75 ஆயிரத்திக்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்தனர். பலர் இந்து மதத்தைத் தழுவக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இதுவரை எந்தக் குற்றவாலியும் கைதுசெய்யப்படவில்லை, சிறைப்படுத்தப்படவில்லை. அரசிடம் கொடுக்கப்பட்ட 3300 புகார்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல குடும்பங்கள் தங்களின் பூர்வீக இடங்களுக்குச் செல்லமுடியாமல் உள்ளனர்.
தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு (என்.எஸ்.எப்) என்பது எழுபது பொதுமக்கள் இயக்கங்கள், மனித உரிமை நிறுவனங்கள், துறவியர், அருள்பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. அந்த அமைப்புக் கூறுகிறது: 12 ஆண்டுகளாக தப்பிப்பிழைத்தவர்கள் நீதி மற்றும் இழப்பீடு நிதிக்காகக் காத்திருக்கின்றார்கள்.
நாமும் அவர்களுக்காக செபிப்போம். அவர்களுக்காக நம்முடைய உறுதுணையை எந்த வழிகளில் கொடுக்க இயலுமோ அந்த வழிகளெல்லாம் கொடுக்க முயலுவோம்.
நன்றி: வத்திக்கான் செய்திகள்
Add new comment