திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் திருத்தந்தை பிரான்சிஸ் ஒற்றுமை


two Popes in one Frame

"San Giovanni Paolo Magno" அதாவது "பெரிய புனித ஜான்பால்" என்ற தலைப்பில், பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று இத்தாலிய மொழியில் வெளியான நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைப் பற்றியும், புனித திருத்தந்தை 2 ஆம் ஜான்பால் அவர்கள் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் சில இங்கு தரப்பட்டுள்ளது.

திருத்தந்தை 2 ஆம் ஜான் பாலின் சிறப்பு - மகிழ்வு மற்றும் இரக்கம்

உயிர்த்த கிறிஸ்துவைச் சந்திப்பதில் கிடைக்கும் மிக முக்கியமான உணர்வு மகிழ்வு என்றும், மகிழ்வையும், இரக்கத்தையும், புனித திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தொற்றுமை 

புனித வியாழன் பற்றி தான் எழுதிய மடல்கள் மற்றும், புவனோஸ் அய்ரெஸ் நகரில் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய சில மறையுரைகளை வாசித்தாலே, அருள்பணித்துவ வாழ்வு பற்றிய, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் எண்ணங்கள் ஒத்திருப்பதைக் காண முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இன்னும் பிறவற்றை இந்நூலில் காணலாம்.  

 

Add new comment

3 + 16 =