சிகரம் தொடுவதில் தொடர் முயற்சி, பயிற்சி அவசியம் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 4

நியார்க் நகரில் கார்னீசி அரங்கத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக இளைஞன் ஒருவன் தன்னுடைய இசைக் கருவியுடன் தெருவழியே நடந்து சென்றான். வழி அவனுக்கு சரியாகத் தெரியவில்லை. எனவே அங்கிருந்த முதியவர் ஒருவரிடம் கார்னீசி அரங்கத்திற்கு எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்று கேட்டான். அதற்கு அந்த முதியவர் பயிற்சி செய் (Practice) என்று அவனிடம் கூறினார். 

அவன் கேட்டது அந்த அரங்கத்தில் சென்று பார்ப்பதற்கான வழி, அவர் சொன்னது அரங்கத்தில் அனைவரும் அவனைப் பார்க்கசெய்வதற்கான வழி. உங்களுக்கு வித்தியாசம் புரியும் என நினைக்கிறேன். தொடர்பயிற்சியால் நாம் எதையும் சாதிக்கலாம். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள் அதுபோலதான். 

சில மனிதர்கள் 3 மணிநேரத்தில் கற்றுக்கொள்வதை, 5 அல்லது 2 மணிநேரம் எடுத்து கற்றுக்கொள்பவர்களும் உண்டு. ஆனால் அடிப்படையில் பயிற்சி எடுத்தால் நாம் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். அதற்கான எந்த சிறப்பு அறிவோ, ஆற்றலோ தேவையில்லை. மனவலிமை கொண்ட தொடர் முயற்சியும் பயிற்சியும்தான். நீங்கள் தயாரா?

Add new comment

7 + 4 =