சிகரம், ஒரு மூங்கில் மரம் 10: முதன்மைபடுத்துதலும், முயற்சிசெய்தலும்

முப்பது நொடிகளில் நம்முடைய இலக்குகளை எழுதவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், 80 சதவீதம் பேர் மூன்று விசயங்களைப் பற்றிதான் முதவில் எழுதுவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அது என்ன என்று பார்த்தோமென்றால், 

1.    பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக
2.    குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறவு சம்பந்தமாக 
3.    உடல் நலம் ஆரோக்கியம் சம்பந்தமாக

இந்த மூன்று இலக்குகளுக்குள் முதன்மைப்படுத்தவேண்டும். அந்த முதன்மைப் படுத்தப்பட்டவற்றில் 3 கேள்விகள் வைத்து அதற்கான பதில் 30 நொடிகளுக்குள் எழுதவேண்டும். எப்படிப்பட்ட கேள்வி என்றால் ஏன் அது முக்கியம், அதை செய்யவில்லையென்றால் என்ன விளைவைச் சந்திக்கநேரிடும் என்ற கேள்விகள் எல்லாம் அதில் அடங்கும்.

இந்த இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும். அதில் சமநிலை எப்பொழுதும் வேண்டும். அதாவது நம்முடைய இலக்குக்கும் நம்முடைய செயலுக்கும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். 

வான் கிரட்ஸ்கி என்ற காக்கி வீரர் கூறுகிறார்: ஒவ்வொரு முறையும் பந்தினைத் தட்டாதபோது, நூறு சதவீதம் இலக்கை (கோலை) தவறவிடுகின்றோம் என்கிறோம். அதாவது, நாம் ஒவ்வொரு முறையும் நம்முடைய முயற்சியை கைவிடுகிறபோது, வெற்றிக்கான முழு வாய்ப்பையும் இழந்துகொண்டே வருகிறோம் என்பதனைத்தான் விளக்குகிறார். 

ஒருவேளை நாம் அப்பொழுது அடிக்கிற பந்துதான் இலக்குக்குபோவதற்கான சரியான நிலையிலுள்ள பந்தாக இருக்கலாம், நாம் அதை அடிக்க முயற்சி செய்யாதபோது, நாம் இலக்கைத் தவறவிடுகிறோம். எனவே முதன்படுத்துவது முக்கியம்தான், அதைவிட நம்முடைய தொடர்முயற்சியால் இலக்கை நோக்கிய உறவு ஏற்படுத்துவது அதைவிட மிகவும் முக்கியம். 
 

Add new comment

12 + 2 =