Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சிறிய உறுதியான அடியோடு முன்னேறுங்கள் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 11
ஒரு பெரும்படையின் தொடக்கம் ஒரு சிறு அடியிலிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வார்கள். எவ்வளவு பெரிய படையாக இருந்தால், அதனுடைய ஒவ்வொரு அடியும், அதன் தெளிவான பாதையும் தான் அதனை பெரிய படையாகவே நிலைத்து நிற்கச் செய்கிறது.
தொடக்கக் காலங்களில் சகாரா பலைவனத்தைக் கடப்பதற்கு முயன்றவர்களில் ஏறக்குறைய 1300 பேருக்கு அதிகமானவர்கள் இறந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த பாலைவனம் 500 மைல் தொலைவுகொண்டது. மிகவும் வறண்டது. உணவோ, நீரோ, பசுமையோ காணமுடியாது. இதனைச் சரிசெய்ய பிரெஞ்ச் நாட்டினர் என்ன செய்தார்கள் தெரியுமா?
அவர்கள் சரியான பயணத்தைத் தொடர வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு 5 கி.மீ தொலைவில் ஒரு பெரிய கருப்பு நிற எண்ணெய் பீப்பாய் வைத்திருப்பார்களாம். எனவே பயணம் செய்பவர்கள் பகலில் ஒரு பீப்பாய் இருக்கும் இடத்திலிருந்து மற்ற இரண்டு பீப்பாய்கள் இருப்பதைப் பார்க்கலாம் என்பதற்காக. அந்த எண்ணெய் பீப்பாய்களில் ஏறக்குறைய 210 லிட்டர் எண்ணெய் நிரப்பப்பட்டிருக்கும். அதலிருந்து எண்ணெய் நிரப்பிக்கொள்ளலாம்.
அவர்கள் ஒரு வைக்கிறபோது, அடுத்த அடி அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. 500 மைல் என்றால் மலைத்துப்போய்விடுவோம். ஆனால் ஒரு பீப்பாய் மற்றொரு பீப்பாய் என்று கடந்து செல்கிறபோது, பாதை எளிதாக அமைகின்றது.
ஆக அவர்கள் பயணம் இனிதாக அமைந்தது. நம்முடைய பாதைத் தெளிவாகத் தெரிந்தால். அந்த தெளிவான பாதையில் படிப்படியாக அடியெடுத்து வைத்துச் சென்றால் நாம் இலக்கை அடையலாம்.
சிறிய சிறிய அடியாக எடுத்துவையுங்கள், பாதையைப் பார்த்துக்கொண்டே பயணம் செய்யுங்கள், வெற்றி நிச்சயம்.
Add new comment