இலக்குத் தெளிவு (CLARITY) - சிகரம், ஒரு மூங்கில் மரம் 7

எந்த ஒரு சாதனையாளருக்கும் தம்முடைய இலக்கினைப் பற்றிய தெளிவு இருக்கவேண்டும். எவ்வளவுக்கு நாம் தெளிவாக இருக்கிறோமோ அவ்வளவு எளிமையாக இருக்கும். கட்டிடம் கட்டுவதாக இருக்கட்டும், பாலம் அமைப்பதாக இருக்கட்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதனை திட்டமிட்டு வடிவமைப்பவர்களுக்கே அதிகமான சம்பளம் கொடுக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள்தான் அந்த பணியின் இலக்கினை மிகவும் தெளிவாக எடுத்துவிளக்குகிறார்கள். அதுதான் அந்தபணியினை தெளிவாக எளிமையாக மேற்கொள்வதற்கு வழிகாட்டுதலாக அமைகிறது. 

நம் வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம். நம்முடைய வாழ்வுப் பாதையை தெளிவாகத் திட்டமிட்டு அமைக்க முயலுகிறோமா அல்லது சூழ்நிலையின் கைதிகளாக வாழ்வை இழந்து எதையாவது செய்துகொண்டிருக்கிறோமா. அப்படி செய்தால், நம்முடைய சக்திகள் திறமைகள் பொன்னான நேரங்கள் அனைத்தும் வீணாகத்தான் போகும். வாழ்வே அர்த்தமற்றுப்போகும்.

எனவே நாம் முதலில் அமர்ந்து இலக்கிற்கான தெளிவு பெறவேண்டும். தெளிவுள்ளவர்களுக்கு மட்டுமே எல்லாம் சாத்தியம் என்பது வரலாறும் அறிவியலும் கற்றுத்தரும் மபெரும் பாடம்.
 

Add new comment

16 + 0 =