Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கற்றுத் தந்தபாடம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
கற்றுத் தந்தபாடம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்போன், ஆஸ்திரேலியா
விட்டுவிடு என்றால் விட்டுவிட மாட்டார்
செத்திடுவாய் என்றால் செவிமடுக்க மாட்டார்
தொற்றிவந்த கொரனா கற்றுத்தந்த பாடம்
விட்டுவிட்டு விலகி நிற்கவைத்த திப்போ!
மதுவருந்தும் பலபேர் மாறிவிட வைத்து
புகைவிரும்பும் பலபேர் அதைநினையா நிற்க
தனிமை எனும்பாடம் தந்ததிந்த கொரனா
அதுவெமது வாழ்வில் அதிகநன்மை யன்றோ!
சூழல் தூய்மையாக துணையாக நின்று
வீடு கோயிலாக ஆகிவிட வைத்து
பாடசாலை வீட்டில் புகுந்திடவே வைத்த
பாடமது எமக்கு நல்திருப்பம் அன்றோ!
கடை உணவெமது வயிறடையா வண்ணம்
வீட்டுணவு உடலைக் காத்திடவே வைத்து
கூட்டமதில் இணையா குடும்பதில் இணைய
காட்டி நின்றபாடம் கருத்தினிலே கொள்வோம்!
கிண்ணமதில் மதுவை ஊற்றித்தரும் கடைகள்
கிளர்ச்சியுடன் நடனம் ஆடிநிற்கும் இடங்கள்
அத்தனையும் மறக்க அமைந்திந்த தனிமை
கற்றுத்தந்த பாடம் கருத்தேற்றி வைப்போம்!
சாதியெனும் சண்டை தனையிழந்து போக
மதபேதம் அதனை மனமெண்ணா நிற்க
காதலுடன் குடும்பச் சூழலெமை கெளவ
கற்றுத் தந்தபாடம் கருத்தை விட்டுபோமா!
அயலவரின் தொல்லை எமக்கு வரவில்லை
ஆசாரம் வீட்டில் அனுசரித்தே நின்றோம்
விழிப்புணர்வு மனதை நிறைத்தபடி இருக்க
கற்றுத் தந்தபாடம் அர்த்தமுள தன்றோ!
Add new comment