கோலாகலமாக கொண்டாடப்பட்ட புனித அன்னாள் திருவிழா | VeritasTamil


Feast of St.Anne, Malaysia -2022

ஜூலை 26, புனிதர்கள் சுவைக்கின் மற்றும் அன்னாள் ஆகியோரின் திருவிழா பல இடங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மலேசியாவிலுள்ள புக்கிட் மெர்தாஜாம் நகரத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் பெருங்கோயிலில் ஜூலை 22 முதல் ஜூலை 31ம் தேதி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பெருங்கோயிலில் திருவிழா கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மலேசிய மக்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், ப்ருனெய் ஆகிய நாடுகளிலிருந்தும் மக்கள் பங்கேற்று புனித அன்னாளின் ஆசீரைப் பெற்றுச்சென்றனர்.

ஜூலை 30 அன்று நடந்த திருப்பலியை ஆயர் தலைமையேற்று நடத்தினார். அவருடன் இணைந்து 30 குருக்களும் திருத்தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

இன்று, புனித அன்னாளின் திருவிழா நாட்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பினாங்கு மாநில அரசும் இப்பெருங்கோயிலை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது. எனவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் திருப்பயணியிகள் வருகை தருகின்றனர். மொத்தத்தில், புனித அன்னாள் பெருங்கோயில் புக்கிட் மெர்தாஜாம் நகரின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.

Add new comment

11 + 6 =