இலக்கை நோக்கிப் பயணிப்பதன் மனநிலை - சிகரம், ஒரு மூங்கில் மரம் 3

ஒவ்வொரு நாளும் நாம் செய்கின்ற வேலையை, தவளை திண்பதுபோன்று தொடங்கவேண்டும் என்கிறார் பிரைன் டிரேசி சொல்லுவார். என்ன கேட்டவுடன் அறுவறுப்பாக இருக்கிறதா? அதுவும் இரண்டு தவளைகளைத் திண்பதுபோன்று என்று சொன்னால் உங்களுக்கு இப்பவே வாமிட்டே வந்துவிடும். இரண்டு தவளைகளை திண்பதுன்னா என்ன? ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு தவளை கொடுத்துவிடுவார்கள். அதைநாம் தின்றால்தான் மற்ற எதையும் சாப்பிடமுடியும், செய்யமுடியும் என்றால் என்ன செய்வீங்க? தவளையை சாப்பிடாமல் இருக்க எத்தனைநாள் சாப்பிடமா, எதையும் செய்யாம இருப்பீங்க?

அப்படித்தான் வாழ்க்கையும். நாம் ஒவ்வொரு நாளையும் தொடங்கும்போதே அந்த நாளில் நாம் செய்யவேண்டிய வேலையில், படிக்கவேண்டிய பாடத்தில், எது நமக்கு மிகவும் பிடிக்காதோ (தவளையை) அதை முதலில் முடித்துவிட்டோம் என்றால் மற்றவை அனைத்தும் தானாகவே நடந்துவிடும்.

இதுல இரண்டு தவளையைத் திண்பது என்றால், சில நேரங்களில் நம்முடைய பணியில் இரண்டு கடினமான வேலைகள் இருப்பின், அந்த இரண்டில் எது அதிகமாக கொடூரமாக இருக்கிறதோ அதைச் செய்யவேண்டும். காலையில் எழுந்தவுடன் குளிர்தண்ணீரில் குளிப்பது என்பது மிகவும் கடினமான விசயம். ஆனால் நாம் ஒரு நிமிடம் அந்த தண்ணீரில் நின்றோம் என்றால் நம்முடைய உடலின் வெப்பம் தண்ணீருக்கு ஏற்றார்போல சில நொடிகளில் மாறிவிடும். ஆக அதைச் செய்துவிட்டால் அந்த நாள்முழுவதும் புத்துணர்வுடன் காணப்படும்.

எனக்கு கணக்குப் பாடம் வெறுப்பாக இருக்கிறது என்று சொல்லும் மாணவன் தன்னுடைய முதல்வேலையாக என்னால் கணக்குப் பாடத்தை படிக்கமுடியும் என்று சொல்லிக்கொண்டு, அதை எப்படியாவது படித்துவிட்டுதான் மற்றவை படிப்பேன் என்று முடிவுசெய்து, அதற்கான வழிமுறையை நாடினால் அதன்பின்பு அவனுடைய எல்லாப் பாடங்களும் மிகவும் எளிமையானதாக மாறிவிடும்.

இப்படி உங்கள் நாட்களை தொடங்கினீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் எத்தகைய கடினமான நிலையையும், எளிதாக வெல்லும் ஆற்றல் பெறுவீர்கள் உங்கள் சக்தியை உணர்வீர்கள்.

Add new comment

1 + 14 =