ஒன்றாக பணியாற்ற அழைப்பு விடுக்கும் கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெரோ | வேரித்தாஸ் செய்திகள்


திருஅவையில் அனைவரும் இணைந்து ஒன்றாக இறை அரசை கட்டி எழுப்ப வேண்டும் என்று அனைத்து ஆயர்கள் மற்றும் குருக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்திய கர்தினால் பேராயர் ஃபிலிப் நேரி ஃபெரோ

இந்தியாவின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின்  (CCBI) தலைவரும், கோவா மற்றும் டாமன் பேராயருமான  கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெரோ, பெங்களூரில் உள்ள புனித யோவான் அறிவியல் மற்றும் சுகாதார அமைப்பின்   தேசிய அளவிலான பயிற்சி வகுப்பினை  கடந்த மே 7  அன்று தொடங்கி வைத்தார். 

நமது திருஅவை கூட்டு ஒருங்கியக்கத்தில் ஒன்றாக பயணம் செய்து வருகிறது பகுத்தறிவுடன் கூடிய இந்தப் பயணம் ஒருங்கிணைந்த தலைமை என்று அழைக்கப்படும் நமது திருத்தந்தையின் கீழ் இயங்கும் திருஅவை இன்று ஒரு புது வடிவத்தை பெற்றுள்ளது. இதில் அனைவரையும் புரிந்துகொள்ளும், மதிக்கும், அனுசரித்து அரவணைத்து செல்லும் ஒரு குடும்பமாக மாறியுள்ளது. இதில் இறைவனின் பணியை  முன்னெடுத்துச் செல்வதில் எளிய மற்றும் நம்பிக்கையுள்ள மக்கள் மற்றும் குருக்களின் மன உறுதியையும் ஈடுபாட்டையும் உயர்த்தும் ஒரு பாலமாக இந்த கூட்டு ஒருங்கியக்கம் ஒரு வழியை உருவாக்க நோக்கம் கொண்டு பணியாற்றி வருகிறது.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பொறுப்பாளர்கள், CCBI கமிஷன்களின் தலைவர், ஆயர்கள், கமிஷன்களின் நிர்வாகச் செயலாளர்கள், துறைகளின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் இரண்டு நாள்  திட்டமிடல் பயிற்சியில்  கலந்து கொண்டனர். 

இந்திய கத்தோலிக்க பேரவையில் உள்ள  தனது 16 கமிஷன்கள், நான்கு திருத்தூது பணிகள் , ஆறு துறைகள் மற்றும் தேசிய  மற்றும் மறைமாவட்டக் கமிஷன்களை இன்னும் அதிகமாக சிறப்பாக பணியாற்ற  ஒரு  திட்டத்தை உருவாக்கி வருகிறது. 2013 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்ட CCBI மேய்ப்புப் பணிகளின்  திட்டத்தின் தொடர்ச்சியே இந்த  திட்டம்.  மேலும் கண்டங்கள்   மற்றும் உலக நாடுகளுக்கு இடையே உள்ள கூட்டு ஒருங்கியதிற்கு  இந்த திட்டம்  உதவும்  என்று  CCBI இன் துணைச் செயலர் அருள்பணி ஸ்டீபன் அலதாரா கூறினார்.

 ஜனவரி 24 முதல் 30, 2023 வரை நடைபெற்ற அதன் 34வது மாநாட்டில்  இறுதியில்  CCBI பத்து முன்மொழிவுகளைக் கொண்டு வந்தது. அதில்  நமது  சூழலில் இயேசுவின் வாழ்க்கை ஒரு புனித  வழியில் என்ற கருப்பொருளைப் பற்றி விவாதித்தது. 

ஆசிய ஆயர்களின் கூட்டமைப்பு (FABC) பாங்காக் ஆவணம் 2023 ஆகியவற்றின் பத்து முன்மொழிவுகளையும் கவனமாக ஆராய்ந்து தீர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

இந்திய கத்தோலிக்க  ஆயர்கள் பேரவையின் அலுவலகப் பொறுப்பாளர்கள் மாநில அளவில்  இந்த செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர் , மேலும்  நம்பிக்கை கொண்ட  எளிய  மக்கள் உட்பட அதிகமான நபர்களை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இந்த அழைப்பு திருஅவையில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றாக பயணிக்க இந்த கூட்டு ஒருங்கியக்கத்தின் தன்மையை புரிந்து கொண்டு ஆற்றல் மிக்க ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த முயற்சி திருத்தந்தையின் ஒரு புதிய இலக்கை அடைந்து வரலாற்றில் இடம்பெறும் என்று கர்தினால் தெரிவித்து உள்ளார்.

அருள்பணி வி.ஜான்சன் SdC

(Sources from RVA English News)

Add new comment

5 + 8 =