Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மணிப்பூர் நிகழ்விற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் பெண்கள் || வேரித்தாஸ் செய்திகள்
மணிப்பூர் மாநிலத்தில் குகி-ஸோ பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவப் பெண்களை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்த மனித மிருகங்களின் 26 நிமிட வைரல் வீடியோவுக்கு இந்திய கிறிஸ்தவ பெண்கள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர் .
முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) தகவலின்படி , ஒரு பெண்ணுக்கு வயது 21, மற்றொரு பெண்ணுக்கு 42 வயது என்றும் கூறப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியால் (BJP) ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்யப்படும் மாநிலமான மணிப்பூரில் முதன்மையாக இந்து மெய்தேய் மற்றும் முக்கியமாக கிறிஸ்தவ குக்கி- ஸோ பழங்குடியினருக்கு இடையே வன்முறை இன மோதல் நடந்த ஒரு நாள் கழித்து, மே 4 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
வன்முறையின் 79 வது நாளில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இந்த கொடூரமான வீடியோ தனது இதயத்தை வேதனையாலும் கோபத்தாலும் நிரப்பியது, குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மணிப்பூர் சம்பவம் எந்த ஒரு நாகரீக தேசத்திற்கும் அவமானகரமானது. இந்த ஜனநாயகக் கோவிலுக்குப் பக்கத்தில் நான் நிற்கும்போது, என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்திருக்கிறது. ஒட்டு மொத்த நாடும் அவமானத்திற்கு உள்ளாகியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
கேரளாவைச் சேர்ந்த பெண் இறையியலாளர் கொச்சுராணி ஆபிரகாமின் கூற்றுப்படி, குற்றவாளிகள் பெண்களின் உடலைப் பயன்படுத்தி பழிவாங்குவதை அனுமதிக்கும் அமைப்பு நியாயமற்றது என்று கொந்தளித்துள்ளார்.
இந்திய அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் தலைவி அருள்சகோதரி மரியா நிர்மலினி கூறும்போது ஒரு பெண்ணாக இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார். இது பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை மீறும் ஒரு மூர்க்கத்தனமான செயலாகும்.
மேலும் சகோதரி நிர்மலினி மேலும் கூறுகையில், இந்த குற்றத்தை கண்காணித்த காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், குற்றத்தை செய்தவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று அனைத்து இந்திய பெண்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான ஆஸ்ட்ரிட் லோபோ கஜிவாலா, மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக பெண்களைக் கட்டாயப்படுத்திய வீடியோவைப் பார்த்த பிறகே மாநில அரசு தற்போது வாய் திறந்து உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் அதிகமாக நடந்து இருப்பதை முதல்வர் தற்போது தொலைக்காட்சியில் ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியானால், ஒன்றிய மாநில அரசுகளின் மௌனத்தின் அர்த்தம் என்ன? பெண்களின் உடல்கள் இப்போது மோதல்களில் ஆயுதம் ஏந்தியிருக்கின்றன, அரசின் கவனத்திற்கும் தலையீட்டிற்கும் தகுதி இல்லை என்று அர்த்தமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அட்டூழியங்கள் பற்றி தெரிந்திருந்தும் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாநில அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடக்கும் இந்த வன்முறைகள் பற்றி அரசுக்கு தெரியாவிட்டால், அது அரசின் கையாலாகாததனத்தையே காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
காஜிவாலாவின் கூற்றுப்படி, அனைத்து மணிப்பூர் அரசு அதிகாரிகளும் உண்மையைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், மாநிலத்தின் அனைத்து குற்றங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அருள்சகோதரியும் ஒரு சமூக ஆர்வலருமான சகோதரி டோரதி பெர்னாண்டஸ் கூறும்போது மணிப்பூர் கலவரத்தினை ஒழுங்கமைக்கப்பட்ட கொடூரமான குற்றம் என்று சாடியுள்ளார். இந்த நிகழ்வு தனது முதுகெலும்பில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று சகோதரி பெர்னாண்டஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த கலவரத்தால் மாநிலத்தில் இணையதள சேவையை மாநில அரசு முடக்கியுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
நீதி மற்றும் அமைதிக்கான வழக்கறிஞர் குழுவில் உறுப்பினராக இருக்கும் அருள்சகோதரி பெர்னாண்டஸ், ஒரு , பெண்களின் உடல்கள் போர்க்களமாக மாறினால், இந்த நாட்டிற்கு என்ன செய்தி அனுப்பப்படுகிறது? நாம் பெண்கள், நமது மானம், முக்கியமில்லையா? எங்களையும் எங்கள் உடலையும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த விரும்புகிறீர்களா? என்று கொந்தளித்து கேள்விகள் எழுப்பியுள்ளார்.
பிரதமரும் முதலமைச்சரும் ஒன்றிய அமைச்சரவையுடன் ராஜினாமா செய்ய வேண்டும் நாட்டில் வாழும் 50 சதவீத பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பாதுகாக்க முடியாவிட்டால் நாம் எப்படி இவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டரை மாதங்களாக நடந்து வரும் மணிப்பூர் கலவரத்தின் வேதனையான செய்திகளுக்கு மத்தியில், இளம் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்ற இந்த கொடூர செயல்களுக்கு சீரோ மலபார் அன்னையர்கள் பேரவை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும் பாரத அன்னையின் மானத்தை கொள்ளையடித்த பிறகும் ஆட்சியாளர்கள் செயல்படாமல் இருப்பது வெட்கக்கேடானது. அந்த மாநிலத்தில் நடப்பதை பார்க்கும்போது மணிப்பூர் முதலமைச்சரும், பிரதமரும் இதற்க்கு உடந்தை என என நாங்கள் சந்தேகிக்கிறோம்’ என அன்னையர் மன்றம் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அதிகபட்ச தண்டனைகளை உறுதி செய்வதும் மட்டுமே சரியான செயல் என்று அம்மக்கள் தெரிவித்தனர்.
_அருள்பணி வி.ஜான்சன்
(Source from RVA English News)
Add new comment