Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இந்திய மக்கள் சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்த கர்தினால் அறிவுரை | வேரித்தாஸ் செய்திகள்
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும், கோவா மற்றும் டாமன் பேராயருமான கர்தினால் பிலிப் நேரி பெராரோ சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்த இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜூன் 23, 2023 அன்று கோவாவில் உள்ள பாஞ்சிமில் உள்ள பேராயர் இல்லத்தில் பணி வாழ்வில் சமூக வலைதள சிந்தனை என்ற தலைப்பில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இந்தியப் பதிப்பின் வெளியீட்டின் போது இந்தச் செய்தியை வழங்கியுள்ளார்.
மேலும் சமூக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளம் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதை ஊக்குவிக்க ஒரு வாய்ப்பை வழங்குகின்றன, ஆனால் அவை நம்மை தனிமைப்படுத்தி பிறருடன் தொடர்பு இல்லாமல் தொடர்பு எல்லைக்கு அப்பாலும் வைக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது நமக்கும் பிறருக்கும் இருக்கும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ஒரு தனி தீவாக மாறிக்கொண்டிருக்கும் இந்த வலைத்தளங்கள் நம்மை அடிமைகளாக்கி நாமும் எல்லாவற்றையும் இழந்து தனி மரமாக மாறுவதன் மூலம் சமூகத்திலிருந்து நம்மை தனிமைப்படுத்தும் ஆபத்தான போக்கை உருவாக்கலாம் இது மிக பெரிய விளைவுகளை உருவாக்கும் என்று கர்தினால் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் CCBI இன் துணைப் பொதுச்செயலாளர் அருள்தந்தை ஸ்டீபன் அலத்தரா கலந்து கொண்டார் , அருள்தந்தை டுமிங் கோன்சால்வ்ஸ், மறைக்கல்வி ஆணையத்தின் நிர்வாகச் செயலர், அருள்தந்தை பேரி கார்டோசோ, சமூக ஊடக தொடர்புக்கான கோவா உயர் மறைமாவட்ட மையத்தின் இயக்குநர் திரு. மெனினோ மெனெஸ், மற்றும் திருமதி ஹேசல் ரோட்ரிக்ஸ என்று பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மே 29, 2023 அன்று, தகவல்தொடர்புக்கான பேரவையால் வெளியிடப்பட்ட ஆவணம், சமூக ஊடகங்களுடனான ஈடுபாட்டிற்கான ஒரு மேய்ப்பு பணியின் மிகசிறந்த ஒரு எதிர்காலத்தை நோக்கிய பயணம் என்று இந்த ஆவணத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆவணத்தில், கிறிஸ்தவர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் ஈடுபாட்டைப் பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறார்கள் , ஏனெனில் தற்போது சமூக வலைதளங்கள் மக்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாறி வருகிறது. வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் அருகில் உள்ளவரை நேசிக்கும் கலாச்சாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் இந்த ஆவணம் விவாதிக்கிறது.
இந்தியாவில் புத்தகத்தை வெளியிடுவதற்கு CCBI பொறுப்பு ஏற்று இதனை வெளியிட்டுள்ளது. புத்தகம் பெற CCBI தலைமைச் செயலகத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது +91-9886730224ஐ அழைக்கவும்.
_ அருள்பணி வி.ஜான்சன்
(Source from RVA English News)
Add new comment