Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
2025 ஜூபிலிக்கு 35 புத்தகங்களை வெளியிடும் இந்திய திருஅவை || வேரித்தாஸ் செய்திகள்
'நம்பிக்கையின் பயணிகள் ' என்ற கருப்பொருளுடன், 2025 ஆம் ஆண்டுக்கான ஜூபிலிக்கு தயாராகும் வேளையில் , இந்திய திருஅவை உலக திருஅவையுடன் இணைந்து பணிகளை ஆற்றி வருகிறது.
நமது தாய் திருஅவையானது தற்பொழுது 2021-2024 ஆம் ஆண்டில் உலக ஆயர் மாமன்றத்திற்க்கான இறுதிக் கட்ட பணிகளின் முதல் நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது . நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறந்த 2025 ஆம் ஆண்டைக் குறிக்கும் ஜூபிலி 2025 என்ற மற்றொரு கொண்டாட்டத்தை கொண்டாட தயாராகி வருகிறோம் " என்று கோவா-டாமனின் பேராயரும், கர்தினாலுமான பிலிப் நேரி ஃபெரோ கூறினார். இந்திய திருஅவை ஜூபிலி 2025 தயாரிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 35 குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது மேலும் ஜூபிலி 2025 ஆண்டிற்க்கான தயாரிப்புகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கான CCBI சாலை வரைபடத்தையும் இந்திய ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ளது.
ஜூபிலி 2025 ஆண்டிற்க்கான கொண்டாட்டங்களை நமது கூட்டு ஒருங்கியக்க பயணத்துடன் ஒருங்கிணைத்து அதனோடு ஒன்றாக பயணிப்போம் என்று பேராயர் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா பெரும்தோற்று மற்றும் போரின் காரணமாக நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் கிறிஸ்தவ வாழ்வில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஜூபிலி கொண்டாட்டங்களை அறிவித்து, உலகில் நற்செய்தி தொடர்பான அடிப்படைக் கேள்விகளுக்கான பிரிவு மற்றும் நற்செய்தி பணிக்கான பேராயத்தின் தலைவர், பேராயர் ரினோ பிசிசெல்லாவுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் கடிதம் எழுதியுள்ளார்.
நம்பிக்கையின் சுடரை நாம் பற்றி எரியச் செய்ய வேண்டும் மேலும் வரவிருக்கும் ஜூபிலி நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் சூழலை மீட்டெடுப்பதற்கு நம்முடைய பங்களிப்பும் நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கையும் மிக அவசியம். அதனால்தான், 'நம்பிக்கையின் பயணிகள் ' என்பதை ஜூபிலியின் முழக்கமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
"ஜூபிலி 2025 ஆண்டிற்க்கான மூன்று நோக்கங்கள்:
முதல் நோக்கம் இயேசுவைக் கொண்டாடுவது,
இரண்டாவது நோக்கம் திருஅவையை கொண்டாடுவது
மூன்றாவதாக நமது நம்பிக்கையைக் கொண்டாடுவது.
2025 ஆம் ஆண்டு ஜூபிலிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தயாரிப்பு பணிகள் உள்ள நிலையில்
(i) 2023 வருடத்தை கற்றலின் வருடமாகவும்
(ii) 2024 வருடத்தை பிரார்த்தனை ஆண்டாக திருஅவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முக்கியமான நான்கு அரசியலமைப்புகள் (11 அக்டோபர் 1962-8 டிசம்பர் 1965) இறை மக்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவதற்கு உரிய ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று திருத்தந்தை விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் மற்றும் நான்கு அரசியலமைப்புகளுடன் இணைந்து கடவுளின் வார்த்தை, வழிபாட்டு முறை, கடவுளின் மக்களாகிய திருஅவை மற்றும் நவீன உலகில் உள்ள திருஅவை பற்றிய 35 சிறு புத்தகங்களை நற்செய்திக்கான பேராயம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மறைமாவட்டங்கள், பங்கு ஆலயங்களில் நவம்பர் 26, 2023 அன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவில் ஜூபிலிக்கான அனைத்து ஏற்பாடுகளைத் தொடங்கி, ஜூபிலி லோகோவை வெளியிட்டு, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பொக்கிஷங்களை மறுபரிசீலனை செய்யவும், ஜெபத்தை புதுப்பிக்கவும் மக்களைத் தகுந்த முறையில் தயார் செய்ய வேண்டும் என்று இந்திய ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து 132 லத்தீன் மறைமாவட்டங்களுக்கும் பயணம் செய்வது , ஒவ்வொரு நம்பிக்கையாளர்களுக்கு நம்பிக்கையின் ஒளிக்கற்றையை அவர்கள் மனதில் ஏற்றி வைப்பதை மிகப்பெரும் கொடையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கர்தினால் பிலிப் நேரி ஃபெரோ அவர்கள் ஜூபிலி 2025 இல், நமது தாய் திருஅவை நம் அனைவரையும் 'நம்பிக்கையின் பயணிகளாக ' மாற பயணிக்க அழைப்பு விடுகின்றது. ரோமில் உள்ள புனித கதவுகளுக்குள் நுழைய நம்மை தயார்படுத்திக் கொள்ளும்போது, நம் அருகில் உள்ள மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறைச்சாலைகள், அகதிகள் முகாம்கள் போன்றவற்றின் கதவுகளுக்குள் முதலில் நுழைவோம், அங்குதான் நம்பிக்கையின் சுடர் மங்கலாக வெளிச்சம் இன்றி உள்ளது அங்கே நமது நம்பிக்கையின் ஒளியை ஏற்றுவோம் என்று கூறினார்.
2025 ஆம் ஆண்டிற்கான ஜூபிளி பெருவிழாவைத் திட்டமிடுவதற்காக அருள்தந்தை இயேசு கருணாநிதி, சமூக தொடர்புக்கான ஆணையம், மற்றும் இறையியல் மற்றும் கோட்பாட்டிற்கான ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவார் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
-அருள்பணி வி.ஜான்சன் SdC
https://www.rvasia.org/asian-news/church-india-prepares-jubilee-2025-rel...
Add new comment