இந்தியாவில் மதமாற்றத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அருள்சகோதரி மற்றும் அவரது குடும்பம் | வேரித்தாஸ் செய்திகள்


சகோதரி பிபா கெர்கெட்டா, ஜூன் 6, 2023 அன்று இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது நவசந்நியாச பயிற்சி முடிந்து முதல் துறவற வார்த்தைப்பாட்டிற்குப்பிறகு   வீட்டிற்குச் சென்றபோது நன்றி திருப்பலி நிறைவேற்றியதால் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ்;  கைது செய்யப்பட்டுள்ளார்.

புனித அன்னாள் அருள்சகோதரிகளின் துறவற சபையில் இணைந்து தனது முதல் துறவற வார்த்தைப்பாடு நினைவாக  சகோதரியின்   வீட்டில் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அருள்சகோதரி, அவரது தாயார் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அருள்சகோதரியும் அவரது தாயும் மற்றவர்களும் மற்ற  மதங்களை அவமதித்ததாக வீட்டிற்குள் புகுந்த இந்து அடிப்படைவாதிகள்  அங்கு குணமளிக்கும் வழிபாடு நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அங்கு கூடி இருந்த கிறிஸ்தவர்கள் கூறியதாவது, மாலையில் நடந்த நன்றி  திருப்பலியில்  கத்தோலிக்க உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அருள்சகோதரிகளின் உறவினர்கள் கலந்துகொண்டனர் என்று கூறியதுடன், அவர்கள்  குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

மூத்த அருள்சகோதரி  ஒருவர் மேட்டர்ஸ் இந்தியாவிடம், ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள சபையில் சகோதரி கெர்கெட்டா தனது முதல் வார்த்தைப்பாட்டினை  ஆறு மாதங்களுக்கு முன்பு எடுத்தார். இருப்பினும் இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை படிப்பதற்காக ஆறு மாதங்கள் பயிற்சி நிறைவு செய்த பிறகே  ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள பாலச்சபர் என்ற கிராமத்திற்கு அவர் வீட்டிற்குச் செல்ல முடிந்தது.

இந்து மதவாதிகளின் குற்றச்சாட்டுக்கு  பதிலளிக்கும் விதமாக, அருள்சகோதரியின் குடும்பம் குணமளிக்கும் வழிபாடு  அமர்வு நடத்தவில்லை அல்லது மற்ற மதங்களை இழிவுபடுத்தும் மறையுரையும்  செய்யவில்லை என்று கூறினார்.

இந்த குற்றச்சாட்டில்; அருள்சகோதரி கெர்கெட்டாவின் தாய் உட்பட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர், என்று அவர் கூறினார்.

வட இந்தியாவில் பரவலாக வாசிக்கப்படும் டைனிக் ஜாக்ரன் என்ற இந்தி செய்தித்தாள் ஜூன் 7 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், ராய்ப்பூருக்கு வடகிழக்கே 425 கிமீ தொலைவில் உள்ள ஜாஷ்பூரில் மிகப்பெரிய அளவில் குணமளிக்கும் நிகழ்வு  மற்றும் மத மாற்றம் நடைபெறுகிறது  என்று செய்தி வெளியிட்டு  மக்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அருள்சகோதரி வசிக்கும் கிராமத்தில் உள்ள பள்ளிபாரா தெருவில்  வசிக்கும் ஹிரமுனி பாய், அவரது வீட்டில் நன்றி திருப்பலி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டபோது, ​​நிகழ்ச்சி குறித்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஜிலா பஞ்சாயத்து (மாவட்ட கவுன்சில்) தலைவர் ரைமுனி பகத் மற்றும் நான்கு பேர் பஜ்ரங் தள் ஆர்வலர்கள் மற்றும் இந்து வாஹினி ஆர்வலர்களுடன் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டிற்குள் நுழைந்து மதம்மாற்றம் குறித்த நிகழ்வு நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். 
மேலும் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று  அருள்சகோதரியின்  வீட்டிற்குள் புகுந்து, அவரது தாயை கன்னத்தில் அறைந்து, அவரது தாயிடம் கிறிஸ்தவம் குறித்து கேள்வி எழுப்பினர். அதோடு, விவிலியத்தையும் கிழித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும் தூண் , ஜெபமாலை ஆகியவற்றை அழித்துள்ளனர்.

இந்து தலைவரும் பாஜக தலைவருமான ஒருவரின் கூற்றுப்படி, சகோதரி கெர்கெட்டாவும் அவரது தாயும் இந்து தெய்வங்களை அவமானப்படுத்தி கிராம மக்களை கலவரத்திற்கு தூண்டினர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அருள்சகோதரி கெர்கெட்டா, அவரது தாயார் மற்றும் மூன்று பேர் மீது மாநிலத்தின் மதமாற்றத் தடைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ்  காவல்துறை அதிகாரி ரவிசங்கர் திவாரி வழக்குப் பதிவு செய்தார்.அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஜாஷ்பூர் சிறையில் ஜூன் 13-ம் தேதி ஜாமீன் மனுக்கள் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜாஷ்பூரில் உள்ள கிறிஸ்தவ தலைவர்கள் 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு அங்கேயே தங்க வைத்தனர். மறுநாள் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதில்  பார்வையற்ற அருள்சகோதரியின்  மாமாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கியுள்ளனர், மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு  கிறிஸ்தவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று  கிறிஸ்தவ தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

_அருள்பணி வி.ஜான்சன்
(News source from RVA English News)

Add new comment

4 + 2 =