அமைதிக்கான விருது பெரும் இந்தியர் | வேரித்தாஸ் செய்திகள்


2023 நிவானோ அமைதி பரிசு பெற்ற இந்தியர் ராஜகோபால்
திரு.ராஜகோபால் பி.வி. மே 11, 2023, வியாழன் அன்று ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் விழாவில் பரிசைப் பெறுகிறார். விருதுச் சான்றிதழுடன் கூடுதலாக, அவர் ஒரு பதக்கத்தையும் இருபது மில்லியன் ஜப்பான் யென்களையும் பெற உள்ளார்.

2023 ஆம் ஆண்டு நிவானோ அமைதிக்கான பரிசு இந்திய ஆர்வலர் பிவி இராஜ கோபால் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், மனித மாண்பு மற்றும் சம உரிமைகளை ஏழை எளிய மக்களுக்குப் பெற்றுத்தர காந்திய வழியில் போராடும் அவரது முயற்சி போற்றுதலுக்குரியது என்றும் கூறியுள்ளார் பிளமினியா கியவனெல்லி 

நிவானோ அமைதி அறக்கட்டளையால் வழங்கப்பட உள்ள சிறப்புமிக்க விருதான 40ஆவது நிவானோ அமைதி விருது, இந்தியர் பிவி இராஜகோபாலுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் அவ்வறக்கட்டளையின் உறுப்பினரும், திருப்பீடத்தின் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் பணித்துறையின் முன்னாள் துணைச்செயலரான பிளமினியா கியவனெல்லி 

9 பேர் கொண்ட நிவானோ அமைதி அறக்கட்டளைக் குழுவானது திரு. இராஜகோபால் அவர்களின் வாழ்நாள் அர்ப்பணிப்பு, காந்தியக் கொள்கைகளின் அடிப்படையில் வன்முறையற்ற செயல்பாடு, இந்தியாவில் உள்ள ஏழ்மையான மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணி ஆகியவற்றிற்காக இவ்விருது அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார் கியவனெல்லி. 

அமைதியான மற்றும் அகிம்சை முறைகளின் வழியாக தனது நாட்டின் ஏழை மற்றும் மிகவும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ராஜகோபாலின் நடவடிக்கைகள்  இருந்து  வருகின்றது என்றும், சாதி மற்றும் பாலின வேறுபாடு இல்லாமல் ஒவ்வொருவரின் சமமான மனித மாண்பு மற்றும் சம உரிமைகளை அங்கீகரிப்பதற்கான அவரது போராட்டம் பெரும் ஊக்கத்தை அளிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் பிளமினியா கியவனெல்லி.

நிவானோ அமைதி அறக்கட்டளையால் வழங்கப்படும் மதிப்புமிக்க விருது, உலக அமைதிக்கான காரணத்தை மேம்படுத்தி, மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவித்து  ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.

அமைதியான மற்றும் வன்முறையற்ற முறைகளில் இளையோர்க்கு கற்பித்தல், "சரணடைதல், “dacoits கும்பல்களுக்கு மறுவாழ்வு வழங்குதல், ஏழைகளின் சேவையில் இளையோர்க்கு கல்வி அளித்தல், ஏழைகளின் முதன்மைத் தேவைகளான நீர், நிலம் காடுகள் போன்றவற்றை நன்கு அறிந்து பராமரித்தல், ஆகியவை அவரது உயர்ந்த மதிப்பைப் பெறும் சாதனைகளில் அடங்கும்.

சுற்றுச்சூழல் கவனிப்பு மற்றும் அர்ப்பணிப்பு

"நில அபகரிப்பு நிகழ்வை எதிர்க்கும் நோக்கத்துடன் நிறுவனங்களுடனான உரையாடல் வழியாக நீதிக்கான பணி முன்னெடுத்துச் செல்லப்பட்டு, உரிய நிலச் சீர்திருத்தமானது மறுபகிர்வு வழியாக மக்களுக்கு இராஜகோபால் அவர்களால் திரும்பப் பெற்றுத் தரப்படுகின்றது.

1948 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த ராஜகோபால், 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மத்தியப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்குச் சென்று அகிம்சை வழியில் சமூக இயக்கத்தை மேம்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கினார். அங்கு நடைபெற்ற உள்ளூர் வன்முறையில் மக்கள் அனுபவிக்கும் அநீதிகள்,  தவறுகளின் விளைவு, இதன் விளைவாக ஏற்பட்ட கொள்ளை கும்பல்களின் வளர்ச்சி போன்றவற்றை கண்டு, மற்ற மூத்த காந்தியத்தலைவர்களுடன் சேர்ந்து, அமைதி வழியில் செயல்பட்டார்.

சிறப்புப்பணிகள்

1980 ஆம் ஆண்டில் “சமூக மாற்றத்திற்கான வன்முறையற்ற நடவடிக்கை” என்ற கருத்தை ஊக்குவிக்க மாநில மற்றும் தேசிய இளைஞர் பயிற்சித் திட்டங்கள் அமைப்பு.

விளிம்புநிலை சமூக மக்களுக்கு நிலம் மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வெகுஜன அமைப்பான ஏக்தா பரிஷத் போன்றவை இவரது முயற்சியால் உருவான அமைப்புக்களாகும்.

திரு. ராஜகோபாலின் சமூகச் செயல்பாடுகளினால் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்ற நிலஉரிமைப் பேரணிகள் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் அதிகப் பார்வையைப் பெற்றுள்ளன.

 

-அருள்பணி .வி.ஜான்சன் 

(Sources from Vatican News)

Add new comment

5 + 2 =