இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை | வேரித்தாஸ் செய்திகள்


இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள்  மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக தில்லி  தலைநகரில் போராட்டம் நடத்தினர்

பிப்ரவரி 19, ஞாயிற்றுக்கிழமை, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக முழக்கங்கள் மற்றும் பதாகைகைகளை ஏந்தி இந்திய  அளவிலான போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தில் பல்வேறு முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் தலைவர் டாக்டர் மைக்கேல் வில்லியம், டெல்லி பேராயர் அனில் குடோ, பரிதாபாத் பேராயர் குரியகோஸ் பரணிகுளங்கரா உள்ளிட்ட பல முக்கிய கிறிஸ்தவ தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சமூகத்திற்கு எதிரான அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள்" குறித்து அரசாங்கம், நீதித்துறை மற்றும் சிவில் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக  தலைநகரில் போராட்டம் நடத்தப்படுவதாக தேசிய செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

மக்கள், தேவாலயங்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தல் மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த போதிலும் போராட்டக்காரர்கள்இது குறித்து  தீவிர கவலை தெரிவித்தனர் .

"மக்களை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவர்களாக மாற்றுவதாக நாங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறோம். இதன் விளைவாக தேவாலயங்கள் மீது தொடர்ச்சியான வன்முறை தாக்குதல்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, சமூகத்தின் மத்தியில்,அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு நிலவுகிறது. ” என்று உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்டீவன் கூறினார்.

"2021 ஆம் ஆண்டில் சமூக உறுப்பினர்களுக்கு எதிராக 525 வன்கொடுமை வழக்குகள் மற்றும் 2022 இல் 600 வழக்குகள்" பதிவு செய்யப்பட்டுள்ளது அதனை இந்த நாடு கண்டதாக அவர் கூறினார்.

"சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பல மாநிலங்களில் தேவாலயங்கள் தாக்கப்படுகின்றன, கிறிஸ்தவ சமூகத்தினர் துன்புறுத்தப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எங்கள் சகோதர சகோதரிகளுக்கு ஒற்றுமையை தெரிவிக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்று போராட்டக்காரர் ஒருவர் கூறினார். டெல்லியின் பஞ்சாபி பாக்கில் இருந்து வந்தது என்றார்.

"உத்தரபிரதேசத்தில், இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 2020 இல் 70 இல் இருந்து 2022 இல் 183 ஆக அதிகரித்துள்ளது" என்று உத்தரபிரதேசத்தின் ஃபதேபூரில் இருந்து ஒரு எதிர்ப்பாளர் கூறினார்.

"எங்கள் வீட்டில் பிரார்த்தனை செய்ய கூட அனுமதிக்கப்படவில்லை. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரார்த்தனை செய்ததற்காக ஒரு சில பெண்கள் கைது செய்யப்பட்டனர்," என்று அவர் தொடர்ந்தார்.
புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறையைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, எதிர்ப்பாளர்கள் தங்கள் கைகளில் கருப்பு ரிப்பன்களைக் கட்டிக் கொண்டனர்.

இழிவான வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, சமூகத்தின் பிரதிநிதித்துவத்துடன், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் தேசிய நிவாரண ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம்  சமர்ப்பிக்க கிறிஸ்தவ சமூகம் ஒரு குறிப்பாணையில் கையெழுத்து வாங்கும் நிகழ்வை இந்த போராட்டத்தில் நடத்தியது.

தேசிய சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் போன்ற மனித உரிமை கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்தவும், கிறிஸ்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்கவும் இந்த குறிப்பாணை கோருகிறது.

குறிப்பாக கவலைக்குரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வழக்குகளின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக அதிகரித்து, 2023 இன் முதல் இரண்டு மாதங்களில் அதன் உச்சத்தை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

-அருள்பணி வி.ஜான்சன் 

(Sources from RVA English News )

Add new comment

3 + 7 =