Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உயிர்ப்பு பெருவிழா அன்று டெல்லியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார் | வேரித்தாஸ் செய்திகள்
இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கான தனது ஆதரவை தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9, உயிர்ப்பு பெருவிழா ஞாயிறு அன்று புதுதில்லியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்திற்குச் சென்றார்.
தூய இருதய ஆண்டவர் பேராலயத்தின் பங்குத்தந்தை அருள்பணி பிரான்சிஸ் சுவாமிநாதன் கூறும்போது , சிறுபான்மை மக்களான கிறிஸ்தவர்கள் மீது அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதை பிரதமரின் வருகை காட்டுகிறது என்றார்.
மேலும் இது சிறுபான்மையினருக்கான அவரது ஆதரவை நமக்கு காட்டுகிறது , என்று கூறினார், பிரதமரிடமிருந்து நாம் பெறும் செய்தி: அவர் நம் மீதும் சிறுபான்மையினர் மீதும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார்.
சிறுபான்மையின மக்களும் தேசத்தின் சமமான குடிமக்கள் என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளர் என்பதை அவரது இந்த பேராலய வருகை நமக்கு உணர்த்துகிறது என்று பங்குத்தந்தை விளக்கினார்.
பிரதம மந்திரி சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்களையும் மற்ற சிறுபான்மை மக்களையும் ஆதரிக்க வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும் மற்றும் இந்த நாட்டின் குடிமக்களுக்கு சமமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என்று தெரிவித்தார்.
அவரது வருகை குறித்து மகிழ்ச்சி அடைந்ததாகவும், பிரதமர் ஒருவர் இந்த பேராலயத்திற்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்றும் அருள்பணியாளர் கூறினார் மேலும் அரசாங்கத்திற்காக நம் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டியது நமது கடமை என்று அருள்பணியாளர் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
நாங்கள் அவருக்காக அவருடைய பணிக்காக இறைவனிடம் வேண்டுகிறோம் மேலும் அவர் மாலையில் பேராலயத்தைச் சுற்றி வரும்போது அவர் பேராலயத்திற்காகவும் கிறிஸ்தவ மக்களுக்காகவும், ஜெபிக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், என்று அருள்பணியாளர் கூறினார். மேலும் பிரதமர் சுமார் அரை மணி நேரம் பேராலயத்தில் செலவிட்டார் அதன் பின்னர் பேராலய வளாகத்தில் அவர் வருகையின் நினைவாக ஒரு மரம் நட்டுச்சென்றார்.
தூய இருதய ஆண்டவர் கத்தோலிக்க பேராலயத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆயர்கள் மற்றும் குருக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பயணத்திற்குப் பிறகு, பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், இன்று உயிர்ப்பு பெருவிழா இந்த சிறப்பான நாளில் டெல்லியில் உள்ள தூய இருதய ஆண்டவர் கத்தோலிக்க பேராலயத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்களையும் சந்தித்தேன். என்று தனது பதிவில் குறிப்பிட்டார்.
தூய இருதய ஆண்டவர் பேராலயம் டெல்லியில் உள்ள கனாட் என்ற இடத்தில அமைந்துள்ளது. இது நாட்டின் பழமையான தேவாலய கட்டிடங்களில் ஒன்றாகும். முன்னாள் திருத்தந்தை புனித ஜான் பால் II இந்த பேராலயத்திற்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார். பிப்ரவரி 1, 1986 முதல் வருகை அதன்பின்னர் நவம்பர் 6, 1999 இரண்டாவது வருகை. அவர் வருகை தந்த அந்த காலகட்டத்தில் அவர் ஆசியாவில் உள்ள திருஅவை பற்றிய அவரது அப்போஸ்தலிக்க அறிவுரையான ஆசியாவில் திருஅவை என்ற திருத்தந்தையின் திருமடலை இந்த பேராலயத்தில் இருந்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அவரது மரணத்திற்குப் பிறகு உயிர்த்தெழுந்த உயிர்ப்பின் ஞாயிறு கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இந்த நாள் தான் அனைத்திற்கும் உச்சக்கட்டமாகும் என்பது நம் அனைவரும் அறிந்ததே.
_அருள்பணி வி. ஜான்சன் SdC
(Source from RVA English News)
Add new comment