பிலிப்பைன்ஸில் உள்ள ரேடியோ வேரித்தாஸ் 846 தவக்கால கண்காட்சியை நடத்தி வருகிறது | வேரித்தாஸ் செய்திகள்


தவக்காலம் என்பது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமான காலம் ஆகும். 40 நாட்கள் இறைவனுக்காக நோன்பு இருந்து பாவ வழியில் இருந்து மீண்டு வர இந்த காலம் உதவுகிறது.இதனை மீட்பின் காலம் ,மனமாற்றத்தின் காலம் என்றும் அழைப்பார்கள். இந்த நாட்களில் இறைவனோடு அதிக நேரம் உறவாடவும், நோன்பு இருந்து மன்னிப்பு பெறவும், ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்வது என எண்ணற்ற விழுமியங்களை கொண்டது இந்த தவக்காலம்.

பிலிப்பைன்ஸில் உள்ள ரேடியோ வேரித்தாஸ் 846 புனித வாரத்திற்கான ஒற்றுமையின் ஒரு பகுதியாக தவக்கால  கண்காட்சியை நடத்தி வருகிறது.

ரேடியோ வேரித்தாஸ் 846  துறைத் தலைவர்  ஜோஸின் கூற்றுப்படி, கிறிஸ்தவ சமூகத்தின் முக்கியமான நாட்களைப் பிரதிபலிக்கும் விசுவாசிகளுடன் சேர்ந்து இந்த கண்காட்சியை நடத்துவது என்பது எமது நிலையத்தின் ஒரு  முயற்சியாகும்.

ரேடியோ வேரித்தாஸ் 846 க்கு அளித்த பேட்டியில் ஜோஸ் கூறுகையில், "இந்த கண்காட்சி இறை நம்பிக்கையாளர்களுக்கு  அவர்களின் தவக்கால யாத்திரையில் உதவும் மற்றும் அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

இந்த தவக்கால  கண்காட்சியானது  ஏப்ரல் 1 முதல் 9 வரை   பிலிப்பைன்ஸில் உள்ள  குவேசான் மாநகரம், மீனவர் வணிக வளாக பொழுதுபோக்கு மையத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. (Quezon City, Fisher Mall Entertainment Centre )

இந்த கண்காட்சியில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை சித்தரிக்கும்  இயேசுவின் உருவங்களும், துயர்மிகு அன்னையின் திருவுருவமும்  மேலும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் எண்ணற்ற திருஉருவங்களும்  இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சியானது  காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

_ அருள்பணி வி. ஜான்சன்

(Source from RVA  English News )
 

Add new comment

3 + 0 =