Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தென்னிந்தியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த கோடை மழை || Veritas Tamil
தென்னிந்தியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் மிக குறைவான கோடை மழை பெய்துள்ளது
இந்தியாவில் அதிக மழை பெய்யும் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கூட சில மாவட்டங்களில் மிகக் குறைவான மழையே பெய்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) படி தென்னிந்தியா 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த கோடை மழையைப் பெற்றுள்ளது, இது மிகவும் கடுமையான சூறாவளி மற்றும் பருவக்காற்றுகளின் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் பல பகுதிகள் ஜூன் மாதத்தில் 88.6 மில்லிமீட்டர் (மிமீ) மழையை மட்டுமே பெற்றது, இது 1971 மற்றும் 2020 க்கு இடையில் இயல்பை விட 45 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
கடந்த 10 நாட்களில் பருவமழையில் முன்னேற்றம் இருந்தாலும் ஜூன் மாத இறுதியில் நாடு முழுவதும் பெய்த மழைப் பற்றாக்குறை 10 சதவீதமாகவும் , பல தென்னிந்திய மாநிலங்களில் மழைப்பொழிவில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஜூலை 4 நிலவரப்படி, நான்கு மாநிலங்களில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக உள்ளது. அவை தெலுங்கானா (53 சதவீதம் பற்றாக்குறை), கேரளா (52 சதவீதம் பற்றாக்குறை), கர்நாடகா (44 சதவீதம் பற்றாக்குறை) மற்றும் ஆந்திரா (26 சதவீதம் பற்றாக்குறை) ஆகும்.
தெலுங்கானாவில், 12 மாவட்டங்களில் மிக குறைந்த மழையும் (60 சதவீதத்திற்கும் அதிகமான பற்றாக்குறை மழை) மேலும் 17 மாவட்டங்களில் 20-59 சதவீதம் பற்றாக்குறை மழை பெய்துள்ளது. நான்கு மாவட்டங்களில் மட்டுமே இயல்பான மழை பெய்துள்ளது
கேரளாவில், நான்கு மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு பதிவு செய்து உள்ளது, ஒன்பது மாவட்டங்களில் குறைவான மழையை பதிவு செய்துளளது., ஒரு மாவட்டத்தில் மட்டுமே சாதாரண மழை பெய்துள்ளது. கேரளாவில் பருவமழைக்கு முந்தைய காலத்திலும் 34 சதவீதம் பற்றாக்குறை மழை பெய்துள்ளது, அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய மழைக்காடுகளின் தாயகமான இந்தியாவின் அதிக மழை வளம் கொண்ட மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மார்ச் மாதத்திலிருந்து அதிக மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மழையின்மைக்கான காரணங்களை இந்திய வானிலை ஆய்வுத்துறை இதுவரை குறிப்பிடவில்லை.
தென்மேற்கு பருவமழை அதன் வழக்கமான தேதியை விட ஒரு வாரம் தாமதமாகவே இந்த வருடம் பெய்தபோதிலும் அடுத்து வந்த சில நாட்களில் விரைவான முன்னேற்றத்திற்குப் பிறகு, அது தெற்கு தீபகற்பத்தில் நிலைகொண்டது. அதன்பிறகு ஜூன் 21-22க்குப் பிறகு மீண்டும் ஒரு விரைவான முன்னேற்றத்தை அடைந்து மீண்டும் அதன் வழக்கமான தேதியான ஜூலை 8 ஐ விட ஆறு நாட்களுக்கு முன்னதாக ஜூலை 2 அன்று முழு மழையை பதிவு செய்தது.
ஜனவரியில் இருந்து அரபிக் கடல் 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பமடைந்துள்ளது, இதுகிட்டத்தட்ட 10 நாட்களுக்கு நீடிக்கும் சூறாவளியின் இந்த நீண்ட சுழற்சியின் விளைவாகவே , மும்பை மற்றும் டெல்லியில் ஒரே நேரத்தில் பருவமழை வர காரணமாக அமைந்தது.
ஜூலை மாதக் கண்ணோட்டத்தில், தமிழ்நாடு மற்றும் தெற்கு கர்நாடகாவின் பெரும்பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD (நிகழ்தகவு மழைப்பொழிவு வரைபடத்தின் மூலம்) காட்டியுள்ளது.
நல்ல மழை பொழிவுக்கான வாய்ப்புகள் மீது தத்தளிக்கும் மற்றொரு அச்சுறுத்தல் எல் நினோ வானிலை நிகழ்வு ஆகும், இது ஏற்கனவே ஜூலை 4 ஆம் தேதி உலக வானிலை அமைப்பு மற்றும் ஜூன் 8 ஆம் தேதி தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.
எல் நினோ என்பது வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பசலனத்தை உருவாக்கி அதன் விளைவாக வெப்பம் அதிகரித்து மிக குறைவான பருவமழைக்கு வழிவகுக்கிறது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை இதுவரை எல் நினோ நிலைமைகளை அறிவிக்கவில்லை ஆனால் ஜூலை மாதத்திற்கான அதன் மாதாந்திரக் கண்ணோட்டத்தில் எல் நினோ இந்த மாதத்தில் உருவாகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
-அருள்பணி வி.ஜான்சன் SdC
(Resource from Down To Earth)
Add new comment