வத்திக்கானில் இருந்து தீபாவளி வாழ்த்து செய்தி | வேரித்தாஸ் செய்திகள்


திருஅவையின் பல்சமய உரையாடல் துறை அக்டோபர் 17 அன்று ஒரு வாழ்த்துக் கடிதத்தை வெளியிட்டுள்ளது, தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் பண்டிகை வாழ்த்துக்களை அனுப்பிய திருஅவை பிளவுபட்ட உலகில் அமைதிக்காக கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை இந்தியாவில் உள்ள இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.  'தீபாவளி' என்பது சமஸ்கிருதத்தில் "எண்ணெய் விளக்குகளின் வரிசைகள்" என்று பொருள்படும், மேலும் இது ஒளியின் திருவிழாவாகும், இது பொய்யின் மீது உண்மையையும் இருளின் மீது வெளிச்சத்தையும், தீமையின் மீது நன்மையையும் வெற்றி கொண்ட நாளினை கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. தீபாவளி இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும், மேலும் இந்த கொண்டாட்டமானது வீடுகளில் தீபங்கள் ஏற்றியும் பட்டாசுகள் வெடித்தும், பிரார்த்தனைகள் செய்தும் மற்றும் அதனோடு குடும்ப உறுப்பினர்களோடு அறுசுவை தயாரித்து உண்பது உள்ளிட்ட எண்ணற்ற மகிழ்ச்சிகளை இந்த விழா கொண்டு உள்ளது.

பண்டிகையை முன்னிட்டு, திருஅவையின் பல்சமய உரையாடல் துறை தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் "மகிழ்ச்சியான  நல்வாழ்த்துக்களையும்,செபங்களையும்" அனுப்புகிறது. "இந்த பண்டிகை உங்களுக்கு அருளையும் மகிழ்ச்சியையும் தரட்டும், மேலும் அனைவரின் வாழ்க்கையையும் மீண்டும் உயிர்ப்பிக்கட்டும்" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மதம், கலாச்சாரம், இனம் மற்றும் மொழி அடையாளங்கள் மற்றும் மேன்மையின் அடிப்படையில் உலகெங்கிலும் அதிகரித்து வரும் பதட்டங்கள் மோதல்கள், வன்முறைகள், போட்டி, விரிவாக்கக் கொள்கைகள் மற்றும் சமூகத்தின் கட்டுப்பாடற்ற தவறான பயன்பாடு ஆகியவற்றால் அடிக்கடி உலக அமைதியை அச்சுறுத்தி வருகின்றன.  இத்தகைய சூழலில் இந்த தீபாவளி சகோதரத்துவத்தையும் அமைதியான சகவாழ்வையும் கொண்டு வர வேண்டும் என்று திருஅவையின் வாழ்த்துக் கடிதம் குறிப்பிட்டுள்ளது.

திருஅவையின் வாழ்த்துக் கடிதம் அனைவரையும் மகிழ்ச்சியின் மக்களாக வாழ வாழ்த்தியுள்ளது அதாவது மக்களிடையே மரியாதை, அன்பு மற்றும் நம்பிக்கை, பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடு ஆகியவற்றில் வாழும் திறன் என்ற பாதையைத் தேட அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொதுவான மகிழ்ச்சிக்கான பாதை என்பது அன்புடன் கூடிய உறவு மக்களுக்கு இடையேயான சந்திப்பு மற்றும் உரையாடல், ஒருவரையொருவர் நலம் விசாரிப்பது மற்றும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது", இது பகிரப்பட்ட பொறுப்புக்கு வழிவகுக்கும், இது ஒவ்வொரு நபரின் உள்ளார்ந்த கண்ணியம் மற்றும் சட்ட உரிமைகளை அங்கீகரிக்க நம்மைத் தூண்டுகிறது.

இந்த வாழ்த்துக்கடிதம் அனைவருக்கும் ஒரு வேண்டுகோளுடன் முடிவடைகிறது, “கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள், மற்ற அனைத்து மத மரபுகள் மற்றும் நல்லெண்ணம் கொண்டவர்களுடன் கைகோர்த்து, இந்த உலகத்தை பாதுகாப்பான வீடாக மாற்றுவதற்கான இணக்கம் மற்றும் கூட்டுப்பொறுப்பு உணர்வை ஊக்குவிப்போம். அனைவரும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்!” என்று திருஅவை தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டு உள்ளது . அனைவருக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

 

அருள்பணி . வி. ஜான்சன்.

Add new comment

1 + 1 =