ஹாங்காங்கில் 15 நாட்களுக்கு திருப்பலிகள் இரத்து நம் கடமை என்ன?


prayer for corona virus

சீனாவின் வுகான் நகரில் தோன்றி, பல நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கிருமி காரணமாக, ஹாங்காங் மறைமாவட்டம், திருநீற்றுப்புதன் திருவழிபாடு உட்பட, இரு வாரங்களுக்கு, திருப்பலிகள் மற்றும், திருவழிபாடுகள் பொது இடங்களில் நிறைவேற்றப்படுவதை இரத்து செய்துள்ளது. இவ்வாறு தீர்மானம் எடுப்பது எளிதானது அல்ல என்பதை எல்லாரும் புரிந்துகொள்வார்கள் என்று, தான் நம்புவதாகத் தெரிவித்துள்ள கர்தினால் டாங் அவர்கள், பிப்ரவரி 15, இச்சனிக்கிழமை முதல், பிப்ரவரி 28 தேதி வரை, அனைத்து பொது திருவழிபாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஹாங்காங் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் ஜான் டாங் (John Tong) அவர்கள் கூறியுள்ளார்.

அதேநேரம், கொரோனா தொற்றுக்கிருமி குறித்து கலக்கம் அடைய வேண்டாமென்றும், கடவுளில் நம்பிக்கையை ஆழப்படுத்தி, நமக்கு அடுத்திருப்பவர்கள் மற்றும், எல்லார் மீதும் கிறிஸ்தவ அன்பைக் காட்டுமாறும், ஹாங்காங் கர்தினால் அழைப்பு விடுத்துள்ளார். இணையதளங்கள் வழியாக நிறைவேற்றப்படும் திருப்பலிகளில் பங்குபெற்று, ஆன்மீகமுறையில் திருநற்கருணை வாங்குமாறும், திருமறை நூல்களை வாசித்து தியானிக்குமாறும், செபமாலைகள் செபிக்குமாறும், கர்தினால் கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நம் கடமை என்ன?

ஞாயிறு வழிபாடுகளில், திருநீற்று புதன் வழிபாட்டில், திவ்ய நற்கருணை அருந்தியபின் திருச்சடங்குகளில் பங்கேற்ற பின் நம் அருகில் அவர்களுக்கு என்று ஓர் இடம் ஒதுக்கி செபிப்பது, நாம் பெற்ற அருளை அவர்களுக்கும் பகிர்ந்து அளிப்பது. அதை அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆண்டவரிடம் வேண்டுவது.

Add new comment

3 + 7 =