Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மனித வர்த்தகம். நீங்கள்? திருஅவை?
ILO உலக தொழில் நிறுவனத்தின் கூற்றுப்படி, 2016 ஆம் ஆண்டில், ஏறத்தாழ 4 கோடியே, மூன்று இலட்சம் பேர், நவீன அடிமைமுறைகளுக்குப் பலியாகியிருந்தனர்.
ஏன் இவர்கள் வர்த்தகத்திற்க்காக?
வணிக நோக்கத்திற்காக, கடத்துபவர் அல்லது மற்றவர்களின் பாலியல் அடிமைகள், கொத்தடிமைகள் ஆக வைக்க, அல்லது பாலியல் தொழிலில் உட்படுத்துவதற்காக, கட்டாயத் திருமணம் புரியும்நோக்கத்திற்க்காக, உறுப்புகள் மற்றும் திசுக்களை களவாடும் பொருட்டு, வாடகைத் தாயாக பயன்படுத்துவதற்காக மற்றும் கருப்பையைத் திருடுவதற்காக, இதுபோன்ற செயல்களுக்கு இவர்கள் உட்படுத்த, பெரும்பாலும் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு அழைத்துச்செல்வதுண்டு.
வகைகள்
மனித வர்த்தகம் என்பது மனிதர்களை வைத்துச் செய்யும் வணிகமாகும். எனவே, ஒருவரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திக் கொண்டு செல்லாமல், வணிகப் பொருளாகப் பாவிக்கப்பட்டாலும் அதுவும் மனித வர்த்தகம் என்றே கருதப்படுகிறது. எடுத்துக்காட்டு, மனிதரை பணியமர்த்துவது.
திருஅவையின் முன்னெடுப்பு?
உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு எல்லாவிதமான நவீன அடிமைமுறைகளுக்கு எதிராகவும், நவீன வாழ்வுமுறையின் வடுவான மனித வர்த்தகம் பற்றி மௌனம் காக்கப்படுவது உடைக்கப்பட வேண்டுமெனவும், இடம்பெறும் செப நடவடிக்கையில், உலகிலுள்ள அனைத்து கிளை காரித்தாஸ் அமைப்புகள் இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மனித வர்த்தகம், உலகளாவிய ஒரு செயலாக உள்ளது, இது வாழ்வில் போராடும் மக்களையே மிகவும் பாதிக்கின்றது என்று கூறிய, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், இந்த அடிமைமுறையில் சிக்குண்டு இருப்பவர்களை மீட்பதற்கு காரித்தாஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது என்று கூறினார்.
என்ன செய்வது?
1. எல்லாம்வல்ல கடவுளை, இஸ்ரயேல் மக்களை மீட்ட கடவுளை, இதில் பாதிக்கப்பட்ட புனிதை தென் சூடான் நாட்டவரான, புனித பக்கித்தா வழியாக வேண்டுவது.
2. நீங்கள் பிறரை வணிகப் பொருளாக பாத்ததுண்டா? மாறுங்கள்.
பிறர் உங்களை அப்படி நடத்தியதுண்டா? என்னவகை அடக்குமுறை, எப்படி வெளியேறினீர், மேலும் என்ன செய்யலாம்.
Add new comment