Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலக வன உயிரினங்கள் தினம்
உலக வன உயிரினங்கள் தினம்
உலகின் பல்லுயிர்ச்சூழலில் வனவிலங்குகளும் செடிகொடிகளும்
முக்கிய அங்கம் வகிக்கின்றன. வன உயிர்களுக்கு அருகில் வசிக்கு
மனிதர்கள் அடையும் பல நன்மைகளை இந்நாளில் எடுத்துக்கூறுகிறார்கள்.
மனித நடவடிக்கைகளின்மூலம் விலங்குகளும் செடிகளும்
பாதிக்கப்படுகின்றன. தற்போது இருக்கும் உயிரினங்களில் சுமார் 25
விழுக்காடு வரும் ஆண்டுகளில் அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் 68ஆவது பொதுக் கூட்டம்
2013ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கூடியது. அப்போது 1973 ஆம்
ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி அனைத்துலக வர்த்தகத்தில் வனவிலங்கு,
செடிகொடிகள் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை
உறுதிசெய்ய ஊஐவுநுளு (வாந ஊழnஎநவெழைn ழn ஐவெநசயெவழையெட வுசயனந in நுனெயபெநசநன
ளுpநஉநைள ழக றுடைன குயரயெ யனெ குடழசய) என்னும் ஒப்பந்தம் கையெழுத்தானதை
நினைவுகூர்ந்தனர். அந்த நாளையே 'அனைத்துலக வன உயிர்கள்
தின"மாக ஆண்டுதோறும் கடைபிடிக்க முடிவுசெய்தனர்.
உலகம் முழுவதும் நவீனமயமாக்கலின் விளைவாக
அழிக்கப்பட்டு வருவது பெரும்பாலும் வனப்பகுதிகளே. இதனால் குறைந்து
வருவது வனப்பரப்பு மட்டுமல்ல. அந்த வனத்தில் வசித்து வந்த
உயிரினங்களும்தான். அண்மையில் கோவை துடியலூர் அடுத்துள்ள
பன்னிமடை ஊருக்குள் புகுந்த விநாயகன், சின்னதம்பி என்ற இரண்டு
யானைகளும் வீடுகள் கடைகளுக்குள் புகுந்தன, அங்கிருந்த வாழை மற்றும்
விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தின. வன உயிரினங்களுக்கு நேரிடும்
பாதிப்புகள் மற்றும் அழிவுகள் காரணமாக, அவற்றின் சூழல் சங்கிலி
அறுபட்டு இயற்கையே மூச்சுமுட்டி தவித்துக்கொண்டிருக்கிறது, பருவநிலை
மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது என்பது நாம் அறிந்ததே. கடந்த 40
ஆண்டுகளில் பறவைகள், மீன்கள், விலங்குகள் பூமியில் வாழும்
உயிரினங்கள் 60 சதவிகிதம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே வன
உயிரினங்களை பாதுகாக்கவும், அவற்றுக்கான உணவு, பாதுகாப்பு,
வாழ்விடத்தை உறுதிசெய்வதே இந்நாள் நமக்குவிடும் அழைப்பு.
Add new comment