Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பின் வரும் செயல்! | மரிய அந்தோணி ராஜன் SdC
பெற்றோர்கள் பழம் சாப்பிட்டால் பிள்ளைகளுக்கு பல் கூசுமா?
இது நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் நடந்த ஒரு சம்பவம். ஒருநாள் இரவு, எங்கள் ஊருக்கு வெளிப்புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிறைய பேரின் வைக்கோல் கட்டுக்கள் திருடு போய்விட்டது. எங்கள் வீடு தான், எங்கள் ஊரில் கடைசி வீடு. யார் திருடி இருப்பார்கள்? எப்படி இந்த திருட்டு யாருடைய கண்ணிலும் படாமல் போய்விட்டது? பல பேர் பல விதமாக அலசி ஆராய்ந்தும் திருடியது யார் என்று சரியாக யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதில் இன்னொரு பெரிய வேதனை என்னவென்றால் அன்று இரவிலிருந்து ஊரில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த செல்லமான நாய் ஒன்றையும் காணவில்லை. அந்த நாய் ஒரு வீட்டுக்கு சொந்தமானது என்றாலும், அதை ஊரில் எல்லோருக்கும் பிடிக்கும். எந்த வீட்டிலும் யார் வேண்டுமானாலும் அதற்கு உணவு கொடுப்பார்கள். அது பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும் சிறு குழந்தைகளுடன் அதாவது எங்களுடன் மிக எளிதாக சேர்ந்துகொள்ளும், விளையாடும். இதுவரை அதனால் சிறுவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. தினமும் இரவு ஊரின் கடைசியில் அதாவது எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் வந்து காவலாய் படுத்துக்கொள்ளும். வெளியாட்கள் அந்த வழியாக வந்தால் அது குறைக்கிற சத்தம், குறைந்தது ஒரு பத்து வீட்டுக்காவது கேட்கும்.
இப்படிப்பட்ட நிலையில் வைக்கோலும் திருடு போய் இருக்கிறது, இந்த நாயையும் காணவில்லை என்கிறபோது யாரோ திட்டம் போட்டு பல நாட்களாக கன்னமிட்டு திருடி இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. மூன்று நாட்கள் ஆகிய பிறகும்கூட யார் திருடியது? அந்த நாய் எங்கு போயிற்று? என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய மூன்றாவது நாள் ஊரில் இருக்கிற மிக முக்கியமான புனித நீர் கிணற்று தண்ணீர் நாற்றம் எடுக்க ஆரம்பிக்கிறது என்ற செய்தி ஊர் முழுவதும் பரவியது. அது என்னவாக இருக்கும் என்று ஊர் பெரியவர்கள் கிணற்றில் இறங்கி தேடும்போது நாங்கள் தேடிக்கொண்டிருந்த அந்த நாயை யாரோ ஒன்று அதோடு சேர்த்து கல்லை கட்டி அந்தக் கிணற்றுக்குள் போட்டிருப்பது தெரியவந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த நாய் எடுக்கப்பட்டதால் அதன் உடல் ஊதிப்போய் இருந்ததோடு, துர்நாற்றமும் வீசியது. எனவே வைக்கோல் திருடுபோன அதே இரவில் தான் இந்த நாயும் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. ஆனால் இதைச் செய்தது யார் என்பது மட்டும் ஒரு புரியாத புதிராகவே இருந்தது.
இந்த சம்பவம் முடிந்து ஏறக்குறைய மூன்று மாதம் கழித்து இன்னொரு செய்தி எங்கள் கிராமத்தை அதிரவைத்தது. ஊரில் எல்லோருக்கும் பரிச்சயமான ஒருவருடைய மகன்கள் இரண்டு பேர் வேறொரு ஊரில் மிகப்பெரிய திருட்டில் அகப்பட்டுக் கொண்டதாகவும் அங்கு அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டு விட்டதாகவும் அவர்களுடைய உடலைக்கூட இரண்டு நாட்கள் கழித்து தான் காட்டில் கண்டுபிடித்து எடுத்து வந்திருப்பதாகவும் செய்தி வந்தது. அதே நாளில் அவர்களுடைய அப்பாவுக்கும் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு கை உடைந்து போனது.
இப்போது ஊருக்குள் எழுந்த சந்தேகம் கேள்வி, ஒருவேளை அன்று அந்த நாயை அடித்துக் கொன்றதும் வைக்கோலை திருடியதும், இந்த நபருடைய குடும்பமாக தான் இருக்குமோ, அதனால் தான் இவருடைய மகன்களுக்கு இப்படிப்பட்ட சாவு கிடைத்திருக்கிறதோ. ஆனால் இதுவரைக்கும் யார் அந்த நாயை கொன்றது யார், வைக்கோலை திருடியது யார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அருட்தந்தை மரிய அந்தோணி ராஜன் sdc
உரோம்,இத்தாலி ...
Comments
பின்வரும் செயல்
Really true
Add new comment