Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
துன்பங்களே வாழ்வின் மூலதனம் ஜே.கே. ரவ்லிங் | J K Rowling
தன்னுடைய ஹரிபாட்டர் தொடர்கள் வெளியிடுவதற்கு முன்பு, அவருடைய அன்புத் தாயை இழந்தார். அவருக்கு திருமணம் உறவு முறிந்துபோனது. அவர் தன்னுடைய முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். வாழ்வோடு போராட முடிவுசெய்த அவர், படித்துக்கொண்டும் அதே நேரத்தில் தொடர்கள் எழுதிக்கொண்டும், தன்னுடைய ஒரே குழந்தையை வளர்த்தும் வந்தார். அவரிடம் வாழ்வை நகர்த்துவதற்கான பணம் இல்லை. வறுமையில் வாடினார். இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளானார்.
அவருடைய உழைப்பு வீண்போகவில்லை. அவருடைய ஐந்து ஆண்டுகள் தொடர்முயற்சியும் கடின உழைப்பும் அவரை உலகின் பணக்காரப் பெண்களில் ஒருவர் என்ற நிலைக்கு எடுத்துச்சென்றது. நம் இதயத்தில் இருக்கும் ஹாரிப் பாட்டர் கதைகளின் சொந்தக்காரர் ரவ்லிங்.
31 ஜூலை 1965 இல் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். சிறுவயதிலிருந்து கதைகளை வாசிப்பதும், தன்னுடைய சகோதரிக்கு சொல்லுவதுமாக இருந்தார். இவருக்கு சிறுவயதிலிருந்து கதாநாயகியாக இருந்தவர் மிட்போர்டு. இவருடைய அனைத்துப் புத்தகங்களையும் படித்துமுடித்தார். வாழ்வில் பல்வேறு தோல்விகளைச் சந்தித்தாலும், அந்த தோல்விகளையும் வேதனைகளையும் தன்னுடைய கதைமாந்தர்களின் வாழ்வில் புதைத்து எழுதத்தொடங்கினார்.
1996 ஆம் ஆண்டு அவருடைய முழு கதையையும் எழுதிமுடித்தார். அடுத்த வருடமே இலண்டன் ப்புளும்பரி பதிப்பகம் அவருக்கு 1500 பவுண்டு முன்பணம் கொடுத்து அவருடைய கதையை புத்தகமாக வெளியிட்டார்கள். பணமும் விருதுகளும் வந்து குவிந்தன. அவரும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொடரை வெளியிட்டார். 16 ஜூலை 2005 இல் ஹாரிபாட்டர் தொடரின் 6 வது புத்தகம் வெளியிடப்பட்ட 24 மணிநேரத்தில் 9 மில்லியன் பிரதிகளை விற்று சாதனைப் படைத்தது.
அவருடைய ஹாரிபாட்டர் தொடர்கதை பல விருதுகளைப் பெற்றுள்ளது. அவர் 500 மில்லியன் பிரதிகளுக்கு மேலாக விற்றிருக்கிறார். இவர் ராபர்ட் கால்பிரைத் என்ற பெயரில் குற்றப் புனைக்கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். எழுத்துத் துறையில் தன்னை முழுமையாக கரைத்ததால், உலகின் முதல் (பில்லினையர்) கோடீஸ்வர எழுத்தாளர் என்ற கௌரவத்தைப் பெற்றார். ஆனால் தன்னுடைய பணத்தை பிறரன்புப் பணிக்கு செலவிட்டதால் அந்த கோடீஸ்வர எழுத்தாளர் என்ற நிலையை இழந்தார். 2020 ஆம் ஆண்டு கணிப்பின்படி இங்கிலாந்தின் 178 வது பணக்காரர் என்ற நிலையில் இருக்கிறார். எல்லா நிலையில் கதவுகள் அடைக்கப்பட்டதாக தோன்றியபோதும், அந்த தோல்விகளையும், வேதனைகளையும் மூலதனமாக வைத்து வாழ்வில் வெற்றிபெற்றார்.
Add new comment