உலக நுகர்வோர் உரிமை தினம் | World Customer Rights Day | March 15


உலக நுகர்வோர் உரிமை தினம்
        

1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் அமெரிக்க ஜனாதிபதி துழாn கு. முநnநெனல அவர்கள்  அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் உரையாற்றினார். உலக அளவில் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையும், நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவர் என்ற பெயரும் இவரையே சாரும். இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் உலக நுகர்வோர் உரிமைகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.         சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960 ஏப்ரல் 1 இல் தொடங்கப்பட்டது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. ஒரு பொருளை பயன்படுத்துபவரே நுகர்வோர். இவர்கள் சந்தையின் முக்கிய முதலாளி. இவர்கள் இல்லையெனில் சந்தை இல்லை. தாங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப சில பொருட்களின் தரம் இல்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். பொருள்களின் தரம், விலை மற்றும் அப்பொருட்களுக்கான நுகர்வோர் உரிமை போற்றுவதே இத்தினம்.
        பொருட்களை வாங்கும் போது அக்மார்க், ஐ.எஸ்.ஐ., எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உள்ளிட்ட தர முத்திரைகள் உள்ளனவா என்பதை சோதிக்க வேண்டும். விலை, உற்பத்தியாளர் முகவரி, காலாவதி தேதி, விற்பனை ரசீது போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். இந்தியாவில் 'நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்" 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் புதிதாக நுகர்வோர் ஒழுங்குமுறை ஆணையம், தவறான விளம்பரங்கள் மூலம் விற்கப்படும் போலி பொருட்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை, புகார் செய்யும் முறையில் தாராளமயம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை, புகார்களுக்கு விரைவில் தீர்வு, வாடிக்கையாளருக்கு பாதிப்பு ஏற்படும் போது இழப்பீடு பெறும் வசதி, கலப்படத்துக்கு தண்டனை போன்ற பல அம்சங்கள் உள்ளன.

 

Add new comment

4 + 3 =