கேட்காமலே கொடுப்பது தர்மம் - கொரோனா, ஒரு மாற்று மருந்து 

தமிழில் பண்பாட்டில் ஒரு வாழ்வுமுறையுண்டு - கேட்டுக்கொடுப்பது தானம், கேட்காமலே கொடுப்பது தர்மம் என்று சொல்வார்கள். தானம் கொடுக்கிறபோது பல வேளைகளில் நம் பெயருக்காக பெருமைக்காகக் கொடுப்பதாகவிடும்;, ஆனால் தர்மம் நம்மில் இருக்கும் தெய்வீகத் தன்மையை நாம் அறியாமலே உலகுக்கு நிதர்சனமாக்கும்.  

விவிலியத்திலும் பல்சமயப் போதனைகளும் வாழ்வியலாக நமக்கு சுற்றிக்காட்டுவது தியாக அன்பின் வாழ்வியல் வடிவமான தர்மம். தவக்காலத்தின் மூன்று செயல்தூண்களில் முக்கியமானது இதுவே.

கொரோனா கிரிமியிலிருந்து நம்மைப் பாதுகாக்க முயன்றுகொண்டிருக்கின்றோம். அதே வேளையில் உலகின் செல்லறித்துக்கொண்டிருக்கும் மற்றொரு கொடிய தொற்றுநோய் நம்மை பற்றாமலும், அப்படியே தாக்கியிருந்தாலும் அதனை உடனடியாக கண்டறிந்து, அவசரகால அடிப்படையில் குணமாக்கவேண்டும். அந்த தொற்றுநோய் என்னவென்றால் நம்முடைய பேராசையும் அதன் பக்கவிளைவாகிய சுயநலமும். 

இந்த உளநோயினால் பாதிக்கப்படாதவர்கள், அறிகுறி உள்ளவர்கள், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் எப்படி தப்பிக்கொள்வது.  தங்களுடைய மனநிலையை கொடுத்தல், தியாகம் என்ற புனித நீரால் சுத்திகரித்துக்கொண்டே இருக்கவேண்டும். 

உங்களிடம் வேலைசெய்பவர்கள், உங்களைச் சுற்றி வாழ்பவர்கள்மீது அக்கறைக் கொண்டு அவர்களின் பசி பணி நீக்க நீங்களே முயலவேண்டும். அதுவும் அவர்கள் தானமாகக் கேட்பதற்கு முன்னதாகவே கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் அது தர்மம். 

உங்களுக்கு தேவைக்கு ஏற்றவாறுதான் வாங்கவேண்டும். ஏனென்றால் அன்றன்றாடம் வாங்குவதற்குதான் வசதியுள்ளவர்களுக்கு இல்லாமல் போய்விடும். 
அவ்வபொழுது உங்களிடம் பணிசெய்பவர்கள், உங்குளுக்குத் தெரிந்த இல்லாதவர், இயலாதவர்களுக்கு போன் செய்து நலம் விசாரியுங்கள். அவர்களுக்காக இறைவேண்டல் செய்யுங்கள். 

இந்த தடுப்புமுறையை சரிவரப் பின்பற்றுகின்றபோது  உங்கள் வாழ்வில் உங்கள் வளத்தில் மாற்றங்களை அனுபவிப்பீர்;கள். பணத்தையும் பதவியையும் அல்ல, மனிதர்களைச் சம்பாதிப்பதே நிலையானது என்கிறது உயர்மனிதர்களின் வாழ்வு. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: மனிதர்களை சம்பாதித்தவர்களையும் அவர்கள் தலைமுறையையும்தான் வரலாறு நினைவுகூர்கிறது. 

கொரோனா நம் உள்ளத்தில் புறையோடிக்கிடக்கும் கொடும் கொள்ளிக் கிருமிகயாகிய பேராசைக்கும் அதன் பக்கவிளைவாகிய சுயநலத்திற்கும் ஒரு மாற்று மருந்து. 

 

Add new comment

3 + 14 =