மூன்று சக்கர மிதிவண்டி தயாரிக்கும் அருள்சகோதரர் ராபின்சன் 


Ghana Business Directory

ஆப்ரிக்காவின் கானா நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கென, சக்கர நாற்காலிகளையும், மூன்று சக்கர மிதிவண்டிகளையும் எளிமையான முறையில், கையால் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளார், மறைப்பணியாளர் ஒருவர். இந்த தனது திட்டம் பற்றி, பீதேஸ் செய்தியிடம் கூறிய, ஆப்ரிக்க மறைப்பணியாளர் சபையின் அருள்சகோதரர் ட்ரெவர் ராபின்சன்  அவர்கள், கானா நாட்டின் டமலே நகரில் மூவாயிரத்திர்கு அதிகமான மக்கள் வாழ்கின்றனர், இவர்களில் மாற்றுத்திறனாளி சிறுவர்களும், வயதுவந்தவர்களும் வெளியே செல்ல இயலாமல், எந்தவித உதவியுமின்றி ஒதுக்கப்பட்டவர்களாக, வீடுகளுக்கு அருகிலே வாழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அருள்சகோதரர் ராபின்சன் அவர்கள், இந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு, தனது நற்செய்தி அறிவிப்புப் பணியை அர்ப்பணித்து, எளிய சக்கரநாற்காலிகளை அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.   

இவர்கள், தான் தயாரிக்கும் மூன்று சக்கர மிதிவண்டிகளைப் பயன்படுத்தி, சாலைகளில் செல்லும் வாய்ப்பைப் பெறுவர் என்று தெரிவித்துள்ள அருள்சகோதரர் ராபின்சன் அவர்கள், முதலில் ஒரு வாரத்திற்கு ஏறத்தாழ பத்து வண்டிகள் எனத் தயாரிக்கத் தொடங்கி, தற்போது 50 வண்டிகளைத் தயார் செய்திருப்பதாகக் கூறியுள்ளார். 

(நன்றி: பிடெஸ்; வத்திக்கான் நியூஸ்)

Add new comment

1 + 14 =