கேமரூனில் 79 மாணவர்கள் கடத்தல்


students at Camoron

ஆப்பிரிக்க நாடான கேமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து அதிக மாணவர்கள் கடத்தப்பட்டதாக தெரிய வருகிறது. வட மேற்கு பிராந்திய தலைநகர் பேமெண்டாவில் நடந்த இந்த கடத்தலில் 79 பேர் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயுதம் தாங்கிய குழுவினர் திங்கட்கிழமை காலை இந்த மாணவர்களை கடத்தியுள்ளதாக தெரிகிறது. 

கேமரூனின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிரதேசங்களில் சமீபத்திய ஆண்டுகளில் பிரிவினைவாதக் கிளர்ச்சிகள் பல நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை தனி நாடுகளாக பிரிக்கவேண்டும் என்று கோரிவரும் ஆயுதக் குழுக்கள் பள்ளிகளைப் புறக்கணிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன. ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினர் கேமரூனில் மக்கள்தொகையில் 20 சதவீதம் வாழ்கின்றனர்.

Add new comment

11 + 9 =