நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க என ஒலித்தது


Nerpada Pesu: தமிழ் வாழ்க Vs பாரத் மாதா கி ஜே ... YouTube #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews

நாடாளுமன்றத்தில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதிவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ் எம்பிக்கள் தொகுதி வாரிசை வாரியாக தமிழில் பதிவியேற்றனர். தமிழக எம்.பி. தயாநிதி மாறன் பெரியார், கருணாநிதி வாழ்க எனக்கூறி பதவியேற்றார். விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் தமிழ் வாழ்க எனக்கூறி பதிவி ஏற்றார். தொடர்ந்து பல்வேறு தொகுதி எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றனர்.

கரூர் தொகுதி எம்.பி. ஜோதி மணி பதவியேற்றபோது வாழ்க தமிழ், வாழ்க தாயகம் எனக் கூறினார். மதுரைத் தொகுதி எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்ட சு. வெங்கடேசன் தமிழில் பதவியேற்றபோது தமிழ் வாழ்க, மார்க்சியம் வாழ்க எனக் கூறினார்.

சிதம்பரம் தொகுதி எம்.பி. தொல். திருமாவளவன் ‘அம்பேத்கார், பெரியார்’ வாழ்க, வாழ்க ஜனநாயகம் எனக் கூறி பதவிஏற்றார். இதுபோலவே திமுக எம்.பி. கனிமொழியும் தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.

தமிழக எம்பிக்கள் பதவியேற்றவுடன் தமிழ் வாழ்க தமிழ் வெல்க என்று முழக்கங்களை எழுப்பியதற்கு சமூக வலைதளங்களில் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் தமிழ் வாழ்க என்ற கேசுடாக் இந்திய அளவில் பிரபலமான இடத்தைப் பிடித்துள்ளது.
 

Add new comment

2 + 6 =