குப்பைகள் இல்லாத நகரம் - வியப்பு


news.lankasri.com/othercountries

ஜப்பானில் உள்ள ஒரு நகரம் குப்பைகள் இல்லாத நகரமாக மாறிவருகின்றது. மேற்கு ஜப்பானில் உள்ள கமிகட்சு என்ற நகரில் 1500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் நகரத்தை குப்பைகள் இல்லாத நகரமாக மாற்றவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளனர். 

தாங்கள் பயன்படுத்தும் பொருள்களை 45 வகைகளாக பிரித்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் அவற்றை மறுசுழற்சி செய்துவருகின்றனர். 

தங்கள் வீட்டிலுள்ள தேவையில்லாத பொருட்களை அவர்களாகவே பிரித்துக்கொண்டு அதற்காக வைக்கப்பட்டுள்ள கிடங்கு ஒன்று வைத்துவிட்டுச்செல்கின்றனர். அது மறுசுழற்சி செய்யப்படுகின்றது. இதுவரை கமிகட்சு நகரிலுள்ள 80 சதவீத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. 

2017-ஆம் ஆண்டு மட்டும் 286 டன் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. 2020-க்குள் நகரமே குப்பைகள் இல்லாத நகராக மாறவேண்டும் என்பதுதான் இவர்களது இலக்கு ஆகும். 

சுற்றுசூழலைப் பாதுகாக்கவேண்டும் என்ற இந்த அக்கறை நமது நகர மக்களிடம் வர ஆரம்பித்தால் நாம் தண்ணீருக்கும் காற்றுக்கும் காசு செலுத்த தேவை வராது. நமது தலைமுறை நலமாக இருக்கும்.

Add new comment

17 + 1 =