இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகர்


Dinesh Guvarthana

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுள்ளார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க கட்சியைச் சேர்ந்த 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதேநாள் நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி நீக்கத்தை ஏற்க மறுத்துள்ள ரணில் அவரே பிரதமராக நீடிப்பதாக அறிவித்திருக்கிறார். ஜனநாயக மரபின்படி ரணில்தான் பிரதமர் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்ய அங்கீகரித்துள்ளார். பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு வரும் 14-ம் தேதி நாடாளு மன்றம் கூடவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சபாநாயகர் நியமனத்தை ஏற்க மாட்டோம் என்று ரணில் தரப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Add new comment

1 + 0 =