அசியா பீபியின் விடுதலை – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு


children of Ashiya

பாகிஸ்தானில் தெய்வநிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனை  உறுதி செய்யப்பட்ட கத்தோலிக்க பெண் அசியா பீபி விடுவிக்கப்பட்டுள்ளது பற்றி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு செய்யப்படுவதாக அவரது கணவர் தெரிவித்திருக்கிறார். 5 குழந்தைகளுக்கு தாயான அசியா பீபிக்கு எதிரான மரண தண்டனையில் இருந்து 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அவரை விடுவித்தது. 8 ஆண்டுகள் தனிமை சிறையில் கழித்த அசியா பீபி சிறையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார்.

ஆனால், இந்த விடுதலை சட்டப்பூர்வமானதா என்று விசாரிக்கும் சீராய்வு மனுவை ஏற்றுக்கொள்ள இசைந்துள்ளதாக அசியா பீபியின் கணவர் அஷிக் மசிக் கூறியுள்ளார். புகார் அளிக்கப்பட்ட அன்றே சீராய்வு தொடங்கியுள்ளதாக பிரிட்டன் பாகிஸ்தான் கிறிஸ்தவ கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த விடயத்தில் கடும்போக்கு அமைப்பு ஒன்று பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அழுத்தத்தை வழங்கி வருகிறது.

Add new comment

2 + 9 =