அமெரிக்காவில் தஞ்சம் கோரும் அசியா பீபி


Ashiya

பாகிஸ்தானில் தெய்வநிந்தனை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டு, மேல் முறையீட்டில் அந்த தண்டனை ரத்து செய்யப்பட்ட அசியா பீவி அமெரிக்காவிடம் தஞ்சம் கோரியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், ஷேக்குபுரா மாவட்டம், இடான் வாலி கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் 54 வயதான அசியா பீவி. கடந்த 2009 ஜூன் மாதம் இறை தூதர் முகமது நபிக்கு எதிராக அவர் அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. தெய்வநிந்தனை வழக்கில் 2010 இல் விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்த 2014 அக்டோபரில் லாகூர் உயர் நீதிமன்றம் அந்த தண்டனையை உறுதி செய்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அசியா பீவிக்கு எதிராக போதிய சாட்சி, ஆதாரங்கள் இல்லை என்று கூறி, கடந்த அக்டோபர் 31-ம் தேதி அவரை விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து பாகிஸ்தான் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வன்முறையில் ஈடுபட்டதாக 1,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அசியா பீபி, அவரது குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களின் இருப்பிடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன், கனடாவிடம் அடைக்கலம் கோரி அசியா பீபியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Add new comment

12 + 0 =