செய்தது சிறிது பெற்றது பெரிது

இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று அவர் எதிர்பார்த்திருப்பாரெனில், அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும். ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார் - 2 மக்கபேயர் 12:45. நாம் இறந்தோருக்கு செய்ய வேண்டியவை சில உண்டு. இறந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்து; பெருந்துன்பங்களில் உழல்வோர் போலப் புலம்பத்தொடங்கு. இறந்தோருடைய உடலைத் தகுந்த முறையில் மூடிவை; அவர்களுடைய அடக்கத்திற்குச் செல்லத் தவறாதே என்று சீராக் நூல் சொல்கிறது.

தோபித்து ஆங்காங்கே வீசப்பட்டிருந்த இறந்த உடல்களை எடுத்து அடக்கம் செய்து வந்தார். இதை செய்ததற்காக அவரை கொல்ல தேடினார்கள். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்து வந்தார். அதற்கான ஆசீர்வாதத்தை அவர் பின் நாளில் பெற்றார். ஆண்டவர் இயேசு கூட லாசருடைய கல்லறைக்கு சென்று அழுதார். மதலேன் மரியாள் இயேசு இறந்த மூன்றாம் நாள் அவருடைய கல்லறையை சந்திக்க செல்கிறார். அதற்கு பலனாக உயிர்த்த இயேசுவை பார்க்கிறார். உயிர்த்த இயேசுவை முதலில் பார்த்ததே அவர் தான். எனவே நாம் இறந்தவர்களுக்காக செபிக்கவேண்டும். அவர்களுக்காக திருப்பலி ஒப்புகொடுக்க வேண்டும். 

செபம்: ஆண்டவரே எங்களோடு வாழ்ந்து எங்களை விட்டு பிரிந்து சென்ற அனைவரையும் நினைவு கூறுகிறோம்.  அவர்களுக்கு இளைபாற்றி கொடுத்து உமது ஒளியின் பிரகாசத்தை காண செய்தருளும். நாங்களும் ஒருநாள் வந்தடைவோம் என்பதை உணர்ந்து உமக்கேற்ற வாழ்வு வாழ துணை செய்யும். ஆமென்.

Add new comment

2 + 1 =