Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நலவாழ்வுப் பணியாளர்களுடன்......
Saturday, September 21, 2019
ஏறக்குறைய 350 உறுப்பினர்கள் கலந்துகொண்;ட இத்தாலிய அறுவைசிகிச்சை மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட நமது திருத்தந்தை தன்னுடைய கருத்துகளையும், இப் பணியின் வரையறைகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
நோயாளிகளின் தனித்துவம் எப்பொழுதும் மதிக்கப்படவேண்டும். அதே வேளையில் இறப்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் நோயாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடாது. தற்கொலை, கருணைக்கொலை போன்றவற்றிற்கு உதவும் வகையில் செயல்படக்கூடாது. சில வேளைகளில் சட்டங்கள் அவர்களுக்கு சாதகமாக அமைவதாக இருந்தாலும், மருத்துவர்கள் அவற்றை தடுக்கலாம். யாரும் தங்கள் உயிரை எடுத்துக்கொள்வதற்கு உரிமையில்லை.
மருத்துவர்கள் நோயாளிகளின் ஆன்ம மற்றும் உடல்நலம் பேணும் வகையில் பணிசெய்யவேண்டும் எனவும் திருத்தந்தை அவர்கள் கேட்டுக்கொண்டார்.
நாம் என்ன செய்ய முடியும்:
- எந்த சூழ்நிலையிலும், எவ்வளவு வேதனையிலும் இறப்பதற்கு விருப்பம் தெரிவிக்கக்கூடாது.
- மற்றவர்கள் செயற்கையாக இறப்பதற்கு உதவுக்கூடாது.
- தற்கொலைகள் கருணைக்கொலைகள் நடைபெறுவதைத் தடுக்க முயற்சிக்கவேண்டும்.
- பிறருடைய எண்ணவோட்டத்தை அறிந்து, தேவையின் அடிப்படையில் அவர்களுடன் நம்முடைய நேரத்தை செலவிடலாம்.
- தனிமையில் தவிப்போருக்கு ஆதரவாக இருக்கவேண்டும்.
- மருத்துவர்களுக்காக செபிக்கவேண்டும்.
- மருத்துவர்கள் நோயாளிகளின் உடல்நலத்தை மட்டும் பேணுவதோடு நின்றுவிடக்கூடாது.
- அவர்களின் ஆன்ம நலன்மீதும் அக்கறை கொள்ளவேண்டும்.
- மருத்துவம் என்பது வேலை அல்ல, சேவை என்பதை உணரவேண்டும்.
Click to share
Add new comment