தேவையில் இருப்பவர்களுக்காக நம் இதயங்களைத் திறப்பது எப்படி? உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் புதுமையாக இருக்கும்


pixabay

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆகஸ்டு 22 ஆம் தேதி வெளியிட்ட டூவிட்டர் செய்தியில் “ஏழைகள், பாதுகாப்பற்றவர்கள், தன்னை ஒரு மனிதராக ஏற்குமாறு நம் கதவைத் தட்டுவோர் போன்றோரின் தேவைகளுக்கு ஆண்டவர் நம் இதயங்களைத் திறப்பாராக” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மனிதரும் பல்வேறு தேவைகளைச் சந்திக்கின்றார். அவர் உங்களையும் என்னையும் சந்திக்க விரும்புகின்றார். நம் கதவைத் தட்டுகின்றார் என்றால், அவர் தன்னுடைய மனஉந்துதலினால் வந்திருக்கலாம் - இந்த மனிதனால் நமக்கு உதவிசெய்யமுடியும் என்ற அந்த மனஉந்துதல். அல்லது கடவுளே அவர்களை அனுப்பியிருக்கலாம், ஏனென்றால் அவர்தான் நமக்கு ஆசீரை அள்ளிக்கொடுப்பவர். 

தேவையில் நம் கதவுகளை தட்டுபவர்கள் நம்முடைய உதவியாளர்களே, நமக்கு தொல்லையாளர்கள் அல்ல. உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்யுங்கள்.
 

Add new comment

13 + 3 =