துன்பத்திற்குள்ளாகும் கிறிஸ்தவர்கள் பற்றிய ஆய்வறிக்கை 


Pravmir.com

கிறிஸ்தவர்களின், குறிப்பாக, சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளில் அவர்களின் இருப்பு, பல்வேறு மதத்தவர் மத்தியில் அமைதிநிறை நல்லிணக்க வாழ்வு இயலக்கூடியே என்பதற்கும், விசுவாசத்திற்கும், உறுதியான சான்றாக உள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உரோம் நகரில், புனித பர்த்தலோமேயு பசிலிக்காவில், ஜூலை 15, இத்திங்களன்று, சித்ரவதைக்குள்ளாகும் கிறிஸ்தவர்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடி பொதுச் செயலர் அருள்பணி அந்துவான் கமிலேரி அவர்கள், கிறிஸ்தவ மறைசாட்சிகளின் துன்பங்கள், மனச்சான்றின் ஒருங்கமைவுக்கும், விசுவாசம், நம்பிக்கை. அன்பு ஆகியவற்றுக்கும் சான்றாக உள்ளன என்று தெரிவித்தார்.

சமய சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், மதத்தின் பெயரால் நடத்தப்படும் சிதர்வதைகளை நிறுத்துவதற்கும் செயல்படும் முறை குறித்து, அரசுகள் சிந்தித்து பார்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அருள்பணி அந்துவான் கமிலேரி.

மக்களாட்சி, சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள நாடுகளில்கூட, சமயத் தலைவர்கள் தங்களின் நம்பிக்கை கோட்பாடுகளுக்காக, குறிப்பாக, வாழ்வு, திருமணம் மற்றும், குடும்பம் சார்ந்த கொள்கைகளுக்காகத் தண்டனை அனுபவிக்கின்றனர் என்பதையும், அருள்பணி கமிலேரி அவர்கள் குறிப்பிட்டார்.

பெருவாரியான நாடுகளில், அரசியல் அமைப்புமுறையில், இன, மொழி, மத வேறுபாடின்றி, அனைத்து குடிமக்களுக்கும் சமய சுதந்திரத்திற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதிலும், சில நாடுகளில் முளைத்துவரும் தேசியவாதம், எளிதாக சமய அடிப்படைவாதத்திற்கு இட்டுச் செல்கின்றது என்றும், குறிப்பிட்டார், அருள்பணி கமிலேரி.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)

Add new comment

1 + 11 =