Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தயாகத் துறவு அவைகள்
தமிழகக் கிறித்தவ வரலாற்றில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டுகள் வரை பெரும்பாலும் மேலை நாட்டைச் சார்ந்த மறைமாவட்ட அருள்பணியாளர்களும் துறவு அவையினரும் மக்கள் பணியில் ஈடுபட்டனர். நாளாவட்டத்தில் அரசியல், சமயக் காரணங்களால் அவர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. எனவே இப் பணியைத் தொடர்வதற்கு தாயகத்திலிருந்து இருபால் துறவிகளை உருவாக்கிவது உரமூட்டுவதாக அமையும் என்ற கருத்தில் உறுதிகொண்டு, அது வாழ்வியலாக மாறியதன் விளைவே தயாகத் துறவு அவைகள்.
புதுச்சேரியில் மறைமாவட்ட மாமன்றம் கூடியபோது அருள்பணியாளர்கள் சொந்த மண்ணிலிருந்து உருவாக வேண்டும் என்ற கருத்தை அனைவரும் எதிரொலித்தனர். புதுச்சேரி மறைமாவட்டத் தலைவராயிருந்த ஆயர் கிளமெண்ட் போனான்டு பெண் கல்வி அவசியம் என்பதையும், பெண் துறவு அவைகளை உருவாக்கி பெண்களின் கல்வி, சுதந்திரம், அறநெறி போன்ற உருவாக்கப் பணிகளைப் பெண் துறவு அவைகளின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அருள்பணியாளர்களின் கருத்துகளோடு தமது கருத்தையும் பதிவு செய்தார். அதன் விளைவாக,
18 மற்றும் 19 ஆம் நுற்றாண்டுகளில்; பெண் தாயகத் துறவு அவைகள் உருவெடுத்தன. 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஆண் தாயகத் துறவு அவைகள் உருவெடுத்தன.
1. புனித அலோசியஸ் கொன்சாகா துறவு அவை (1775)
2. மரியாவின் திரு இருதய பிரான்சிஸ் சகோதரிகள் துறவு அவை (1844)
3. காணிக்கை அன்னை துறவு அவை (1853)
4. வியாகுல அன்னை மரியின் ஊழியர்துறவு அவை (1854)
5. அடைக்கல அன்னையின் பிரான்சிஸ் சகோதரிகள் துறவு அவை (1858)
6. திருச்சிராப்பள்ளி புனித அன்னாள் துறவு அவை (1858)
7. மாதவரம் புனித அன்னாள் துறவு அவை (1874)
8. திரு இருதய சகோதரிகள் துறவு அவை (1884)
9. புனித வளனாரின் பிரான்சிஸ் சகோதரிகள் துறவு அவை (1887)
10. அமல உற்பவ அன்னை துறவு அவை (1899)
11. திரு இருதய சகோதரர்கள் துறவு அவை (1903)
12. புனித மிக்கேல் சகோதரர்கள் துறவு அவை (1916)
13. இயேசுவின் திரு இருதய சகோதரிகள் துறவு அவை (1952)
14. மறைபரப்பு சகோதரிகள் துறவு அவை (1974)
15. மரிய அக்சிலா துறவு அவை (1976)
16. புனித தோமாவின் பிரான்சிஸ் சகோதரிகள் துறவு அவை (1978)
17. அமல மரி புதல்வியர் துறவு அவை (1984)
18. இயேசுவின் சகோதரிகள் மறைமாவட்ட சமூக அவை (1993)
19. அமல மரி தூதுவர்கள் துறவு அவை (1998)
(நன்றி: திருஅவை வரலாறு-8, முனைவர் திரவியம், 204-215).
கடவுளின் பரிந்துரை
ஆக, தாயக திருஅவைகள் பல்வேறு இலக்குகளோடு உருவாகியிருக்கின்றன. அதுவும் குறிப்பாக, கிறித்தவ ஆன்மீகம் என்பது மனிதனுடைய முழு வாழ்வியலிலும் மாற்றங்களையும், மனிதனுடைய மாண்பினை உயர்த்துவதையும் தழுவியே அமைந்திருக்கின்றது. தயாகத் துறவு அவைகள் தமிழக வரலாற்றில் பல மாற்றங்கள் உருவாகுவதற்கு வித்திட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
அதே வேளையில், இன்றைய காலக்கட்டத்தில் நமது இலக்கை நோக்கியப் பயணம் தெளிவாகவும், தொடர் பயணமாக இருக்கிறதா என்று நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டியது நம் கடமை. நமது வரலாறு என்பது நம்முடைய வாழ்வை மீண்டும் புடமிடுவதற்கு, நம் பணியை புதிய வேகத்துடன் தொடர்வதற்கான வாழிகாட்டி.
இலக்கு மக்களை நோக்கிய நம்முடைய பணியை முழு ஊக்கத்துடன் செய்வோம்.
இது காலத்தின் கட்டாயம், கடவுளின் பரிந்துரை.
Add new comment