Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
“அப்பா இன்னும் கொஞ்சம் நேரம்தானே... நான் இப்படியே இருக்கின்றேன்” - ரோச்சனா
தனது மரணைத்தை முன்கூட்டியே அறிந்திருந்த ஒன்பது வயதான ரோச்சனா என்னும் சிறுமியைப் பற்றிய தகவல்கள் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 260 அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். இதில் நீர்கொழும்பு கட்டுவாபிட்டி ஆலயத்தில நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிறுமி ரோச்சனாவும் கொல்லப்பட்டார்.
இது குறித்து அவருடைய தந்தை கருத்துதெரிவிக்கையில், “அப்பா இன்னும் கொஞ்சம் நேரம்தானே... நான் இப்படியே இருக்கிறேன்” என கடைசியாக கூறினாள் என்றார். தனது மகள் சொன்னதுபோலவே கொஞ்சம் நேரத்தில் அவள் இறந்துவிட்டாள்.
உயிர்ப்பு பெருவிழாத் திருவிழாவுக்காக என் மகளுக்கு புத்தாடை வாங்கிக்கொடுத்திருந்தேன். அதை அணிந்துகொண்டே ஆலயத்திற்கு வந்தாள். ஆலயத்தில் அதிக அளவிளான ஆட்கள் இருந்தார்கள். இந்நிலையில் தற்கொலை வெடிகுண்டு சுமந்தவருக்கு நேர் எதிராக நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். ஆலயத்தில் அமர்வதற்கு இடமில்லாமல் இருந்தது. வழக்கம்போல திருப்பலி நடைபெற்றது. எனக்கு முன்னால் என் மகள் இருந்தாள். அவளை உட்காரச்சொன்னேன். ஆனால் அவர் உட்காராமல், “அப்பா இன்னும் கொஞ்சம் நேரம்தானே... நான் இப்படியே இருக்கின்றேன்” என்று பதிலளித்தார். அவள் சொன்னதுபோலவே கொஞ்சம் நேரம் மட்டும்தான் உயிருடன் இருந்தார் என அவருடைய தந்தை கண்ணீருடன் கூறினார்.
அவருடைய தாயிடம் கேட்டபோது, தனது பாடத்தின் பயிற்சி நோட்டின் இறுதிப் பகுதியில் 14 முதல் 21 வரை உள்ள எண்களை எழுதியிருக்கின்றார். அதில் 21 ஆம் எண்ணை மட்டுமே அடித்து கிறிக்கியிருக்கின்றார். இதனை ஒரு மாதத்திற்கு பின்னரே நாங்கள் தெரிந்துகொண்டோம் என்றார்.
(நன்றி: தமிழ்வின்)
Add new comment