6வது தங்கம் வென்று சாதித்தார் மேரி கோம்


சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் ஆறாவது தங்கப் பதக்கம் வென்று உலக சாதனையை உருவாக்கியுள்ளார்.  

.

டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆறு தங்கப் பதக்கங்கள் வெல்லும் முதல் பெண்மணி மேரி கோம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

இதற்கு முன்னர் கோம் மற்றும் அயர்லாந்தின் கேட்டி டெய்லர் ஐந்து பட்டங்களை வென்றதுதான் உலக சாதனையாக இருந்தது.

 

 

முன்னதாக 2002, 2005, 2006, 2008, 2010 என உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

48 கிலோ லைட் வெயிட் பிரிவில் 13 வயது இளையவரான உக்ரைன் வீராங்கனை 22 வயதாகும் ஹன்னா ஒகோடாவை, சனிக்கிழமை மாலை நடந்த போட்டியில் கோம் வீழ்தினார்.

 

மூன்று பிள்ளைகளின் தாயான மேரி கோமின் வாழ்க்கை வரலாறு இந்தி திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.

Add new comment

1 + 0 =