5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜாவுக்கு தோல்வி முகம் - வெற்றி மகிழ்ச்சியில் காங்கிரஸ்


தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா, மிசோரம் தவிர்த்த மூன்று முக்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

 

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்தது.

 

ஆனால், தற்போது நடைபெற்ற தோதலின் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் மட்டும் இழுபறி நீடித்து வருகிறது.  

 

ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மிசோரத்தில், தற்போது மிசோ தேசிய முன்னணி முன்னிலையில் உள்ளது.

 

தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் சந்திர சேகர ராவின் டிசிஎஸ் கட்சி 93 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

 

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றன.

மதியம் 12 மணி நிலவரத்தில் மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏறக்குறைய 10 இடங்கள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது.

 

ஒட்டு மொத்தமாக பாஜகவுக்கு எதிராக வட மாநில மக்கள் கையளித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.   

Add new comment

2 + 1 =