4வது முறையாக வங்கதேச தலைமையமைச்சரானார் ஷேக் ஹசினா


வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சியின் தலைவரான 71 வயதான ஷேக் ஹசினா 4-வது முறையாக அந்நாட்டின் தலைமையமைச்சராக பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.

 

வங்கதேச அதிபர் அப்துல் ஹமித் பதவியேற்பு பிரமாணம் செய்து வைக்க ஷேக் ஹசினா அதிபர் மாளிகையில் 42 அமைச்சர்களுடன் பதவியேற்றுக் கொண்டார்.

 

வங்கதேசத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற தேர்தலில் 288 தொகுதிகளில் அவாமி லீக் கட்சி வென்றது.

 

இந்த தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியாகினர்.

 

எதிர்க்கட்சிகள் வெறும் 6 இடங்களையே கைப்பற்றின. இந்தத் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Add new comment

6 + 2 =